உணவு பொருட்களில் இருக்கும்  Monounsaturated Fatty Acids, Trans Fat, Total Fats, Saturated Fats என்று எழுதப்பட்டு இருக்கும். ஆனால் அதில் எது உடலுக்கு நல்லது செய்யும் எது கெட்ட கொழுப்பு என்ற குழப்பம் இருக்கும். அந்த குழப்பங்களுக்கு விடை இதோ..

Reduced Fat : உணவில் ஏற்கெனவே இருக்கும் கொழுப்பிலிருந்து 25 சதவிகிதத்தைக் குறைத்துத் தயாரிப்பது. ஏற்கெனவே கொழுப்பு அதிகமுள்ள உணவில்,  கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டாலும், அது Reduced Fat என்றுதான் எழுதப்பட்டிருக்கும்.


Total Fats: ஓர் உணவிலிருக்கும் அனைத்து வகையான கொழுப்புகளையும் உள்ளடக்கியது இது. உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு, தீமை செய்யும் கொழுப்பு என எல்லாவற்றின் அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


Cholesterol : இதயப் பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம் இந்த கொழுப்பு தான். இறைச்சி மற்றும் பால் பொருள்களில் கொலஸ்ட்ரால் இருக்கும். 0 கிராம் கொலஸ்ட்ரால் என்று குறிப்பிடப் பட்டிருக்கும் பாக்கெட் உணவுகளில்கூடச் சர்க்கரை மற்றும் ட்ரான்ஸ் ஃபேட்டின் அளவையும் கவனிக்க வேண்டும்.


 Trans Fat: மிகவும் மோசமான கொழுப்பு வகை இது. ரத்தத்தில் இருக்கும் நல்ல கொழுப்பைக்  குறைத்து, கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்களில்   இந்தக் கொழுப்பு நிறைந்திருக்கும். வெண்ணெய்க்குப் பதிலாக இந்த எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். விலை குறைவு மற்றும் நீண்ட நாள்களுக்கு உணவு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதால், பல பொருள்களில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பிரெட், சிப்ஸ், பிஸ்கட், பேக்கரி உணவுகள் போன்றவற்றில் இக்கொழுப்பு இருக்கும்.


Monounsaturated Fatty Acids: உடலுக்கு நன்மை கொழுப்பு.  நட்ஸ் வகைகளில் இவ்வகைக் கொழுப்பு இருக்கிறது. ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெயிலும் இருக்கிறது.
Unsaturated Fats: இது உடலுக்கு நன்மை செய்யும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.


Polyunsaturated Fatty Acids:  ஒமேகா 3, ஒமேகா 6, சோயா பீன் எண்ணெய், கனோலா எண்ணெய், ஆளி விதை, வால்நட் போன்றவற்றில் இருக்கிறது. உடலின் சீரான செயல்பாட்டிற்கு இது அவசியம்.


Saturated Fats: ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தும். பாமாயில், தேங்காய் எண்ணெய், வெண்ணெய், சீஸ், இறைச்சி போன்றவற்றில் இவ்வகைக் கொழுப்பு அதிகமாகக் காணப்படும். இதை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.