கணவனை கட்டிப்போட்டு மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில், முன்னாள் கணவனின் தம்பி ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

திருமணம் ஆனது முதல் கணவன் - மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், தனது கணவனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

அதன் பிறகு, அந்த பெண் வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

இப்படியான சூழ்நிலையில், அந்தப் பெண் கடந்த 13 ஆம் தேதி சனிக் கிழமை இரவு அங்குள்ள சஜாவர் கிராமத்திற்கு அருகில் உள்ள சாலையில், தனது தற்போதைய கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். 

அப்போது, இதனை நோட்ட மிட்ட அந்த பெண்ணின் முன்னாள் கணவரின் தம்பி, தனது சக கூட்டாளிகளுடன் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று உள்ளார். அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அவர்கள் சென்ற போது, அவர்களை வழிமறித்த இந்த கும்பல், கணவன் - மனைவி இருவரையும் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவரை கடுமையாகத் தாக்கி விட்டு, அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி போட்டு உள்ளனர். அத்துடன், கொடூரத்தின் உச்சமாக, அந்த கணவன் முன்பே, அவரின் மனைவியை அந்த கும்பல் மாறி மாறி வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதனால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளனா அந்த பெண், நடக்க முடியாமல் நடந்து வந்து அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்தவர்களிடம் தனக்கு நேர்ந்ததைக் கூறி, அவர்களிடம் உதவி கேட்டு உள்ளார். அதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக, இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது கணவன் மற்றும் குழந்தையை மீட்டு, அவர்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கணவன் முன்பே அவரது மனைவியை
பாலியல் பலாத்காரம் செய்த, அந்த பெண்ணின் முன்னாள் கணவனின் தம்பியையும், அவரது 2 கூட்டாளிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், இந்த வழக்கில் தற்போது தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது வரை கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில், அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.