வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆணின் பிறப்புறுப்பை, பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சித்தி மாவட்டத்தில் இருக்கும் உமரிஹா எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது வயதான பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருக்கு, கணவன் மற்றும் 13 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று முன் தினம் 18 ஆம் தேதி வியாழன் அன்று, அந்த பெண்ணின் கணவர், வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். இதனால், அந்த பெண் தன்னுடைய 13 வயது மகனுடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படியான நிலையில், இரவு 11 மணி அளவில் அந்த பெண் தனது வீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த பாதி சாம நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர், வீட்டிற்குள் பதுங்கிவிட்டார். 

இதனைப் பார்த்த அந்த பெண்ணின் 13 வயதான மகன், வந்திருப்பவன் திருடன் என்று நினைத்து, அக்கம் பக்கத்தினரின் உதவியைப் பெற வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார்.

இதனால், வீட்டில் அந்த பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். அப்போது, அந்த பெண் தனியாக இருப்பதைப் பார்த்த அந்த நபர், அந்த பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த மர்ம நபரோடு போராடி உள்ளார். 

இந்த போராட்டமானது கிட்டத்தட்ட 20 நிமிடங்களாக நடந்திருக்கிறது. அந்த நபரும் விடுவதாக இல்லை, அந்த பெண்ணும் விடுவதாக இல்லை. இப்படி போராடிப் போராடி ஓய்ந்து போன அந்த பெண்மணியை, அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, தன்னை தற்காத்துக்கொள்வதற்காக, வேறு வழியின்றி கட்டிலின் கீழ் இருந்த அரிவாளை எடுத்து, அந்த நபரின் பிறப்புறுப்பை அந்த பெண் வெட்டி உள்ளார்.

இதில், அந்த நபரின் பிறப்புறுப்பு வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. இதனையடுத்து, அந்த நபரால் எழுந்து கூட நடக்க முடியவில்லை. இதனால், ரத்த வெள்ளத்தில் அவர் அங்கேயே உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்து உள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், அவர்களது உதவியுடன், அந்த பெண் அங்குள்ள காதி எனும் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணிக்கு சென்று, தனக்கு நடந்த பாலியல் பலாத்கார முயற்சி குறித்து கூறி புகார் அளித்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, பிறப்புறுப்பில் ரத்த காயங்களுடன், அந்த நபர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்து உள்ளார். 

இதனையடுத்து. அந்த நபரை மீட்ட போலீசார், முதலுதவிக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலும், அதன் பிறகு, சற்று தொலைவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்க, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் உயர் சிகிச்சைக்காக ரேவா மாவட்ட மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பல பிரிவுகளின் கீழ் சம்மந்தப்பட்ட ஆண் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.