கம்பளைண்ட் கொடுக்க வந்த பெண்ணை, ஆசை வார்த்தைகள் கூறி போலீஸ் காண்ஸ்டபிளே பல முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 45 வயதான கணவன் சரவணன் - 38 வயதான மனைவி அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவிக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துகொண்டே இருந்தது.

இதனையடுத்து, தனது மனைவியிடம் கணவன் சரவணன் வரதட்சணை கேட்டு பலமுறை கொடுமைப் படுத்த தொடங்கி உள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையிலான சண்டை அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே சண்டை அதிகரித்த நிலையில், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மனைவி அமுதா, தனது கணவன் சரவணன் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அப்போது, அந்த காவல் நிலையத்திலிருந்த ஒரு காண்ஸ்டபிள், புகார் கொடுக்க வந்த பெண்ணோடு நட்பாகப் பழகுவது போல நடித்து, அவரது நம்பிக்கையும், அன்பையும் பெற்றிருக்கிறார். 

அதன் பிறகு, அந்த பெண்ணிடம் போன் நம்பர் மற்றும் அவரது வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டு இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணிடம்  செல்போனில் வழக்கு விசயமாகப் பேசுவது போல் பேசியிருக்கிறார்.

மேலும், அந்த பெண்ணின் வீட்டுக்கு விசாரணை நடத்துவது போல சென்று, அவருக்கு ஆசை ஆசையான வார்த்தைகள் கூறி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்.

அத்துடன், அந்த பெண்ணின் வீட்டிற்குத் தொடர்ந்து சென்ற அந்த காண்ஸ்டபிள், “உன் கணவன் சரவணன் மீது தான் தவறு இருக்கிறது. அவனை நாங்கள் சும்மா விட மாட்டோம். நீ எப்படி இத்தனை நாளா அவன்கூட குடும்பம் நடத்தின?” என்று, அமுதாவின் மனசை மாற்றுவது போல் பேசி, அந்த பெண்ணை தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
 
ஒரு கட்டத்தில், அந்த பெண்ணின் வீட்டிற்கு அந்த காண்ஸ்டபிள் அதிக முறை வந்து பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், உடனடியாக காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்திருக்கிறார்.

ஆனாலும், அதன் பிறகும் அந்த காண்ஸ்டபிள் தரும் பாலியல் தொல்லை இன்னும் அதிகமாகி உள்ளது. 

குறிப்பாக, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்த பிறகும், அந்த போலீஸ் அந்த பெண்ணை தன்னுடன் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து அங்கு வைத்தும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, தன் மீது உயர் அதிகாரியிடம் புகார் அளித்த காரணத்திற்காக, அந்த பெண்ணை, அந்த காண்ஸ்டபிள் தாக்கி உள்ளார். 

இதனால், மீண்டும் உயர் அதிகாரியைச் சந்தித்து, அந்த பெண் புகார் அளித்த நிலையில், சம்மந்தப்பட்ட காண்ஸ்டபிள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அத்துடன், இது தொடர்பான விசாரணை தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சம்பவமும், இந்த வழக்கும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.