உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 பேர் சேர்ந்து 9 பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நிலையில், டிவிட்டரில் விளம்பரம் செய்ததால் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் சட்ட விரோதமாக ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டு, பாலியல் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்தது.

இது குறித்துக் குறிப்பிட்ட விளம்பரத்தை போலீசார் கவனித்து உள்ளனர். அந்த விளம்பரமானது, டிவிட்டர் பக்கத்தில் பாலியல் இன்பத்திற்கு அணுகவும் என்பது போல், தலைப்பைப் போட்டு அது தொடர்பான விபரங்களை மேலும் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளீக் செய்யவும் என்று, ஒரு டிவிட்டரின் லிங் இருந்துள்ளது.

அதன் படி, குறிப்பிட்ட அந்த லிங்கை ஓபன் செய்து பார்த்த போலீசார், அது முழுக்க முழுக்க பாலியல் தொழில் சார்ந்த என்பதை உறுதி செய்தனர்.

அத்துடன், இந்த பாலியல் தொழிலை, ஹைடெக்காக அந்த கும்பல் செய்து வருகிறது என்பதையும் போலீசார் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த குறிப்பிட்ட டிவிட்டர் லிங்கை போலீசார் ஒருவரை வைத்து தொடர்புகொள்ள வைத்து நோட்டம் இட்டு வந்த நிலையில், அந்த பாலியல் கும்பல் பற்றிய தேடுதல் வேட்டையிலும் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, வாடிக்கையாளர்கள் போல் போலீசார் ஒருவர் குறிப்பிட்ட லிங்கில் உள்ள தொலைப்பேசி எண்ணில் பேசி உள்ளார். எதிர் முனையில் பேசிய பாலியல் தொழில் நடத்தும் கும்பலைச் சேர்ந்தவரும் “இங்க வாங்க, அங்க வாங்க” என்று மாறி மாறி வர வைத்து, இறுதியாக பாலியல் தொழில் செய்து வரும் அந்த ஒரு குறிப்பிட்ட விடுதிக்கு வர வைத்து இருக்கிறார்.

அதன்படி, குறிப்பிட்ட அந்த விடுதி அங்குள்ள கான்பூரில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பின் தொடர்ந்து வந்த போலீசார் திடீரென்று அந்த விடுதியில் ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை பார்த்த அங்கு இருந்தவர்கள் 4 புறமும் சிதறி ஓடினார்கள்.

ஆனாலும், அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார், அந்த விடுதியில் உல்லாச இன்பத்திற்காக வந்த வாடிக்கையாளர்கள், விடுதியை நடத்துபவர், பாலியல் தொழில் நடத்துபவர்கள் என மொத்தமாக 11 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், பாலியல் தொழில் உட்படுத்தப்பட்ட 9 பெண்களை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட 9 பேரிடமும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் அனைவரும் பல மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதை உறுதி செய்தனர்.

மேலும், அந்த 9 பெண்களும், வேறு வேறு வேலை என்று ஏமாற்றி அழைத்து வரப்பட்டு வலுக்கட்டாயமாக இந்த பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து உள்ளதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அந்த பெண்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் கல்பனா குப்தா என்ற பெண் மூலம், இந்த விடுதியில் ஒப்படைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

முக்கியமாக, அந்த விடுதியில் வைத்து பாலியல் தொழில் நடத்தப் பயன்படுத்தப்பட்ட 21 செல்போன்கள், 4 இருசக்கர வாகனங்களையும் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். 

அதே நேரத்தில், இந்த பாலியல் கும்பலுக்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தும் கிளைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும், பல பெண்கள் ஏமாற்றி அழைத்துவரப்பட்டு, மிரட்டலுக்கு உட்படுபத்தி இது போன்ற பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், மீட்கப்பட்ட பெண்கள் வாக்கு மூலம் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த கும்பலுக்குத் தொடர்புடைய மற்ற பகுதியில் செயல்படும் பாலியல் கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.