உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 குழந்தைகளின் தாய் ஒருவர் 4 பேரால் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தில் உள்ள கியான்பூரில் 4 குழந்தைகளுக்குத் தாயான ஓர பெண், கடந்த 3 ஆம் தேதி மாலை அந்த பகுதியில் உள்ள ஒரு சந்தைக்குச் சென்று உள்ளார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேர்ந்து, அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று உள்ளனர். 

அப்போது, அந்த பெண் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, அந்த 4 பேரும் சேர்ந்து, அந்த பெண்ணை தூக்கிச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத அங்குள்ள ஜமுனி போக்ரா என்ற பகுதிக்குக் கடத்திச் சென்று அந்த பெண்ணை 4 பேருமாகச் சேர்ந்து வெறித் தீர மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

மேலும், “இந்த பாலியல் பலாத்கார சம்பங்கள் குறித்து வெளியே சொன்னால், உன் குழந்தைகளைக் கொன்று விடுவோம்” என்றும், அவர்கள் கடுமையாக எச்சரித்து மிரட்டி அனுப்பி உள்ளனர். இதனால், நடக்க முடியாமல் நடந்து வீடு வந்து சேர்ந்த அந்த பெண்மணி, தனது கணவரிடம் இது குறித்துக் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர், கதறி அழுதுவிட்டு தன் மனைவியைத் தேற்றி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, இந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக தனது மனைவி உடன் சென்று அங்குள்ள பாதோகி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விபரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதன்படி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்சய் சுக்லா, விகாஸ் குமார், டிங்கு சுக்லா, ராய்ப்பூர் கிராமத்தில் வசிக்கும் சோனு உபாத்யாய் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, பாலியல் பலாத்கார குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேரில் 3 பேரை தேடிக் கண்டுபிடித்து போலீசார் கைது செய்து உள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இந்த கொரோனா காலத்தில் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த பெண்ணை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதனிடையே, கடந்த வாரம் உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம் பெண் பாலியல் பலாத்கார கொடூர கொலை வழக்கு, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து எதிர்க் கட்சிகளும் தங்கள் சார்பில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இது எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிலர், பெண்களைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருவது, நாட்டு மக்களிடையே, கடும் அதிர்வலைகளையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.