உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் தான், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பல்லியா மாவட்டத்தில் உள்ள ராஸ்டா பகுதியில் நேற்றைய முன் தினம் மாலை 17 வயது சிறுமி ஒருவர், தனது பாட்டியைப் பார்க்க அங்குள்ள மாவ்வில் இருந்து ராஸ்டா ரயில் நிலையத்திற்குச் சென்று உள்ளார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக, எந்த வித போக்குவரத்து வசதியும் இல்லாததால், அந்த சிறுமி நடந்தே சென்றுள்ளார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள், அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். 

வெகு தூரம் நடந்த வந்த சிறுமிக்கு அந்த இளைஞர்கள் உதவுவது போல் முன் வந்துள்ளனர். அதன்படி, அங்குள்ள ஒரு ரிக்ஷாவில் அமரும் படி கூறி உள்ளனர். 

அந்த இளைஞர்களின் பேச்சைக் கேட்டு அந்த சிறுமியும் நம்பி அதில் அமர்ந்துள்ளார். சிறுமி அமர்ந்ததும், அந்த சிறுமியிடம் நல்ல முறையில் பேச்சுக் கொடுத்து, நைசாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அந்த சிறுமியை அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அந்த 4 இளைஞர்களும் சேர்ந்து, அச்த சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம்  செய்துள்ளனர்.

வெறித் தீர அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது, பாலியல் டார்ச்சரின் வலி தாங்க முடியாமல் சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அந்த பகுதி மக்கள் ஓடி வருவதைப் பார்த்த அந்த 4 பேரும், அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி உள்ளனர். 

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று, அதனைப் பதிவு செய்துகொண்டனர். அத்துடன், இது தொடர்பாக வழக்கப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட 4 இளைஞர்களையும் அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த 4 பேரும், 25 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். அத்துடன், அந்த 4 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், சிறுமி சிகிச்சை பெற்ற வரும் நிலையில், மருத்துவப் பரிசோதனையின் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும், அதன் பிறகே கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, 17 வயது சிறுமியை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.