கல்லூரியில் படிக்கும் மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவன் உட்பட மொத்தம் 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் 
அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர பலாத்கார சம்பவமானது, வழக்கம் போல் நடைபெறும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த முறையும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மவானா நகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த மாணவி, அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 

அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த தன்னோடு படிக்கும் பங்கஜ் என்ற மாணவரோடு, அந்த இளம் பெண் பழகி வந்திருக்கிறார்.

ஆண் நண்பன் பங்கஜை முழுவதுமாக நம்பிய அந்த இளம் பெண், அவருடன் நெருங்கிப் பழகி வந்த நிலையில், அவர் சொன்னபடியெல்லாம் கேட்டிருக்கிறார்.

இந்த சூழலில் தான், கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி அன்று காதலன் பங்கஜை, சந்திக்க அந்த இளம் பெண் சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த காதலன் பவானிஜ், அங்குள்ள மாவனா என்னும் பகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, இந்த இளம் பெண் அங்கு வந்த சமயத்தில், கொரோனா ஊசி போட அந்த பகுதி மக்கள் யாரும் வராத காரணத்தால், அந்த இடம் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டம் இன்றி இருந்து உள்ளது.

அப்போது, இந்த இளம் பெண் அங்கு வரவும், அங்கு வேறு யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்ட காதலன் பங்கஜ், அங்கிருந்த தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, அந்த மாணவியை அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்திற்கு தங்களது காரில் கடத்தி சென்று உள்ளனர்.

குறிப்பிட்ட அந்த கரும்பு தோட்டத்திற்குச் சென்ற பிறகு, அந்த சிறுமியின் வாயை மூடி, அவரை காதலன் உட்பட 5 பேரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அப்போது, கொடூரத்தின் உச்சமாக, அந்த 5 பேரில் ஒருவன் மட்டும், அந்த பெண்ணை தன் நண்பர்கள் பலாத்காரம் செய்வதை, தனது செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கிறான்.

பின்னர், அந்த இளம் பெண்ணிடம், “இந்த பலாத்கார சம்பவம் குறித்து வெளியே சொன்னால், உன்னுடைய இந்த வீடியோவை வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவோம்” என்றும், மிரட்டி அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பி வைத்து உள்ளனர்.

ஆனால், அதன் பிறகு குடிபோதையில் இருந்த அந்த இளைஞர்கள், அந்த பாலியல் பலாத்கார வீடியோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் அந்த இளம் பெண்ணின் தந்தையின் கவனத்திற்குச் சென்று உள்ளது.

பெற்ற மகளின் இந்த ஆபாச வீடியோவை பார்த்து மனமுடைந்த அந்த பெண்ணின் தந்தை, அங்குள்ள மாவனா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 5 பேரில் வசிம் மற்றும் சொஹைல் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். அத்துடன், தலைமறைவாக இருக்கும் மற்ற 3 பேரையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.