துப்பாக்கி முனையில் சகோதரனை நிற்க வைத்து, அவரது 15 வயது சகோதரியை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் 
அதிர்ச்சியையும், உச்சக்கட்ட பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு, மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல ஒரு பக்கம் திரும்பிக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் பாலியல் தொடர்பான கொடூர குற்றங்கள் மற்றொரு பக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

அதுவும், இந்தியாவிலேயே வட மாநிலங்களில் தான் இப்படியான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது என்று கூறப்பட்டாலும், அந்த வட மாநிலங்களில் கூட உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் மிகவும் வெறித்ததுமான மற்றும் மிகப் பயங்கரமான பலாத்கார சம்பங்கள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், தற்போது உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் கடந்த 23 ஆம் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் 4 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி நுழைந்து உள்ளது.

அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், சகோதரனும், அவரது 15 வயது சகோதரியும் மட்டுமே அந்த வீட்டில் இருந்து உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சகோதரனை எழுப்பி, துப்பாக்கி முனையில் பணையமாகப் பிடித்து வைத்துக்கொண்டனர்.

பின்னர், அந்த இளைஞனின் 15 வயது சகோதரியை, அந்த சகோதரன் கண் முன்னாடியே அந்த 4 பேரும் மிரட்டியே மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர். 

இந்த கொடூரத்தின் உச்சமாக, அந்த 4 பேரில் ஒருவன், இந்த பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டு, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.

அத்துடன், மானத்திற்குப் பயந்த அந்த சகோதரனும், 15 வயது சிறுமியும் இந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக வெளியே எதுவும் கூறாத நிலையில், இந்த பலாத்காரம் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அந்த பகுதி முழுவதும் பரவி உள்ளது.

பின்னர் ஊரில் இருந்து திரும்பிய பெற்றோரிடம், இது குறித்து அவர்கள் கூறி கதறி அழுதுள்ளனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன் படி, சம்மந்தப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் 4 பேரையும் மிகத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

இதனிடையே, துப்பாக்கி முனையில் சகோதரனை நிற்க வைத்து, அவரது 15 வயது சகோதரியை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், உச்சக்கட்ட பீதியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.