உதவி கேட்டு வந்த விதவை பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தாசில்தாரை அந்த பெண்ணும், பொது மக்களும் சேர்ந்து அடித்து, உதைத்த 
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அடுத்து உள்ள பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில், டி.எஸ். ஜெயதார் என்பவர், தாசில்தாராக பணியாற்றி வருகிறார். 

2 ஆம் நிலை தாசில்தாரான ஜெயதாரிடம், அதே தாலுகா அங்கலி கிராமத்தைச் சேர்ந்த விதவை பெண் ஒருவரின் மகன், அரசின் மாதாந்திர விதவை உதவித் தொகை கேட்டு விண்ணப்பம் வழங்கி இருக்கிறார். 

அந்த உதவித் தொகை கேட்ட மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், “உனது தாயுடன் வந்து என்னை பார்க்க வேண்டும்” என்று, கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற அந்த இளைஞன், தனது தாயாரிடம் கூறி, அவரை அழைத்துக்கொண்டு தாசில்தாரை பார்க்க வந்திருக்கிறார். 

தனது மகனுடன் அந்த விதவை பெண், தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை நேற்று நேரில் வந்து பார்த்து உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணை மட்டும் அலுவலகத்திற்குள் வரும்படி தாசில்தார் கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த பெண் தனது மகனை அலுவலகத்திற்கு வெளியே நிற்க வைத்து விட்டு, அந்த பெண் மட்டும் தனியாக உள்ளே சென்று உள்ளார்.

அப்போது, தாசில்தார் டி.எஸ்.ஜெயதார், அந்த விதவை பெண்ணிடம் மிகவும் ஆபாசமான முறையில் பேசியதாகத் தெரிகிறது. 

மேலும், அந்த அலுவலகத்தில் வைத்தே அந்த விதவை பெண்ணுக்கு அந்த தாசில்தார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

அத்துடன், பாலியல் அத்துமீறலின் உச்சமாக, தனது பேண்டை கழற்றி, பிறப்பு உறுப்பை அந்த விதவை பெண்ணிடம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த விதவை பெண், என்ன செய்வது என்று தெரியாமல், அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். வெளியே வந்ததும், அங்கு நின்றுகொண்டிருந்த தனது மகனிடம் உள்ளே நடந்த விஷயங்களைக் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், இந்த விசயத்தை அங்குள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அத்துடன் நிற்காமல், அந்த பெண் தனது மகனுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆவேசமாகப் பேசி போராட்டத்தில் இறங்கினார். 

மேலும், அப்போது அந்த வழியாக வந்த அந்த தாசில்தாரை பாதிக்கப்பட்ட விதவை பெண்ணும், அங்கு கூடியிருந்த பொது மக்களும் சேர்ந்து அடித்து, உதைத்து தர்ம அடி கொடுத்தனர்.

அப்போது, தாசில்தார் டி.எஸ்.ஜெயதாரை அந்த விதவை பெண் செருப்பால் அடித்து கடுமையாகத் தாக்கி உள்ளார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அங்கு இருந்த மற்றொரு தாசில்தார், பிரிதம் ஜெயின் அங்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை அந்த பெண் எடுத்துக் கூறியிருக்கிறார். 

இதைக் கேட்ட அந்த தாசில்தார், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குறிப்பாக, “தாசில்தார் டி.எஸ். ஜெயதார், இப்படி பெண்களிடம் அருவெறுப்பான முறையில் நடந்து கொள்வது புதிது அல்ல என்றும், அவர் ஏற்கனவே தனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியரிடமும் இப்படியாகத் தகாத முறையில் நடந்து கொண்டு இருப்பதாகவும்”  அங்கு    கூடியிருந்தவர்கள்  குற்றம்சாட்டினார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.