கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தில் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வர விரைந்து சென்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி உடன் பார்சலை கைப்பற்றினர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சிக்கியது. ஆனால் லேபிளில் உணவுப்பொருள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் சந்தேகம் எழ பார்சலை வாங்க வந்த சரீத் மாட்டிக் கொண்டார். அவர் மூலமாக கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என விசாரணை நடைபெற்றது. அதில் ஸ்வப்னா சுரேஷ் என்ற பெயர் வெளிவந்தது. அப்போது தொடங்கிய புயல் இன்று வரை அடங்காமல் வீசிக் கொண்டிருக்கிறது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.
 
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கேரள மாநில அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் விவகாரம் தங்கக் கடத்தல். இதில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷை சுற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமின் கோரி ஸ்வப்னா தாக்கல் செய்த மனு கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் விஜயகுமார் வலியுறுத்தினார்.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால் ஜாமீன் வழங்க இயலாது என்று கோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஜாமின் வழங்கக் கோரி ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், ``இந்த வழக்கு எந்த ஒரு அடிப்படையுமின்றி கற்பனையில் உருவாக்கப்பட்ட வழக்கு. மத்திய-மாநில அரசுகள் இடையேயான பிரச்சனையில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது" என கூறியிருந்தார்.

தேசிய புலன்விசாரணை நிறுவனம் நீதிமன்றத்தில் கூறுகையில், ``சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ் நேரடியாக வரும் இந்தச் செயலை குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே செய்துள்ளார் என்பதற்கு முதன்மையான ஆதாரங்கள் இருக்கிறது" எனக் கூறி அதை சமர்பித்தது.

100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷின் பங்கு குறித்த ஆதாரங்களை விரிவாக ஆராய்ந்த சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி