பாதுகாப்புத் துறையில் 101 ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 'பாதுகாப்பு அமைச்சகம் இப்போது பிரதமர் மோடி அறிவித்த தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பெரிய உந்துதலுக்கு தயாராகியுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதற்காக 101 பொருட்களுக்கு இறக்குமதி தடையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விதிக்கிறது. பாதுகாப்புத் துறையில் சொந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நம் நாட்டின் டிஆர்டிஓ நிறுவனம் வடிவமைத்து உருவாக்கிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும். பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கை நோக்கி இது ஒரு பெரிய படியாகும்.

நடப்பு நிதியாண்டில் பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு மூலதன கொள்முதல் செய்வதற்காக கிட்டத்தட்ட 52,000 கோடி ரூபாய் செலவினத்துடன் ஒரு தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது· இறக்குமதி மீதான தடை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறக்குமதி தடைப்பட்டியலில் எளிய பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், எல்.சி.எச்., ரேடார்கள் மற்றும் பல உயர் தொழில்நுட்ப ஆயுதங்களும் உள்ளன. இந்த இறக்குமதித் தடையால் ராணுவத்துக்கு ஏறக்குறைய 200 கோடி ரூபாய் 5,000 கோடி ரூபாய் வரை செலவாகும்.

இந்தியாவுக்குள் பல்வேறு வெடிமருந்துகள் மற்றும் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதற்கான திட்டத்தில் இந்திய தொழில்துறையும், பாதுகாப்புத் துறையும் இணைந்து செயல்படும்' என்று ராஜ் நாத் சிங் தெரிவித்துள்ளார்.