பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் சிறு நீரை அந்த கடையின் உரிமையாளரே கலந்த சம்பவம், வீடியோவாக வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் திஸ்பூர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வட மாநில ஸ்நாக்ஸ்களில் பிரபலமாகத் திகழ்கிறது பானிபூரி.

இந்த பானிபூரி ஸ்நாக்ஸ் தான், இப்போது தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும், பிரபலமான ஸ்நாக்ஸாக மாறி இருக்கிறது.

தமிழகத்தின் பல ஊர்களிலும், சென்னையில் தெரு முனைகள் தோறும் இந்த பானிபூரி கடைகள் ரோட்டோரங்களில் அதிகமாகவே முளைத்திருக்கின்றன. இது போன்ற கடைகளைத் தேடித்தான் நம் வீட்டின் சின்ன சிறு செல்ல குழந்தைகள் சென்று, அந்த பானிபூரிகளை வாங்கி உண்ணுகின்றனர்.

இப்படியான சூழலில் தான், அசாம் மாநிலம் கெளஹாத்தியில் செயல்பட்டு வரும் ஒரு பானிபுரி கடையில், அந்த கடையின் உரிமையாளர் ஒருவர், பானி பூரிகளைத் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகிறார். 

அப்போது, அந்த பானிபூரி தயாரிக்கும் பணிகளை செய்துகொண்டே, அங்குள்ள ஒரு பக்கெட்டில் ஒரு கப்பை எடுத்து, தான் அணிந்திருக்கும் ஆடையை விளக்கிக்கொண்டு, அதில் தனது சிறுநீரை பிடிக்கிறார். 

இதனையடுத்து, அந்த கப்பில் உள்ள சிறுநீரை, பானிபூரிக்கு பயன்படுத்தும் நீரில் கலக்குகிறார். 

இந்த காட்சிகளையெல்லாம், அங்கு சற்று தள்ளி நின்றவர்கள், அவருக்குத் தெரியாமல் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்தனர். 

இதனை, அந்த பகுதியின் பல்வேறு நபர்களுக்கு அவர்கள் வாட்ஸ்ஆப் மூலமாகப் பரப்பி உள்ளனர். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்ப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் உரைந்து உள்ளனர். 

அத்துடன், இந்த வீடியோ அங்குள்ள போலீசாரின் கவனத்திற்குச் சென்ற நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட பானிபூரி கடையின் உரிமையாளரை அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.