மும்பையில் பெண் ஒருவர் தன் கணவர் சென்ற காரை வழிமறித்து, “மரியாதையா அவள வெளியே வரசொல்லு” என்று சத்தம் போட்டு, நடு ரோட்டில் சக்களத்தி சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும் மும்மை மாநகரம், பல மாநில மக்களும், இணைந்து வாழும் மாநிலமாகவும் திகழ்கிறது. இதனால், மும்பையில் ஒரு குறிப்பிட்ட கலாச்சார பண்பாடுகள் அங்குப் பின்பற்றுவது இல்லை. இதனால், அங்கு மேல்நாட்டுக் கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் தான் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக் கிழமை அன்று மும்பை பெடர் சாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தன் காரில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக தன் கணவரும் மற்றொரு காரில் அந்த வழியாகச் சென்றுள்ளார்.

அலுவலகம் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற கணவர், இந்த நேரத்தில் இந்த பக்கம் எங்கே செல்கிறார் என்று, கணவரின் காரை உற்று நோக்கி உள்ளார். அதில், கணவரின் பக்கத்து இருக்கையில், வேற ஒரு பெண் அமர்ந்துள்ளார். 

அத்துடன், காரில் அந்த பெண்ணுடன், தன் கணவர் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு சென்றதையும், அந்த பெண் பார்த்துள்ளார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன் கணவரின் காரை பல கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று வழி மறித்து நின்றுள்ளார். 

இதனையடுத்து, காரை விட்டு இறங்கிய அந்த பெண்மணி, தன் கணவரின் காரின் முன்பு நின்று, தன் கணவரைக் கீழே இறங்கி வரச்சொல்லி சண்டை போட்டுள்ளார். ஆனால், அவர் கீழே இறங்கி வரவில்லை. 

இதனைத்தொடர்ந்த, “தன் சக்காலத்தியை பார்த்து, “மரியாதையா அவள வெளியே வரசொல்லு” என்று சத்தம் போட்டு, கூச்சலிட்டு நடு ரோட்டில் சக்களத்தி சண்டை போட்டுள்ளார். ஆனால், காரில் இருந்த அவர்கள் இருவரும் கீழே இறங்கி வர மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த காரின் மீது ஏரிய அந்த பெண், தன் செருப்பைக் கழற்றி, அந்த பெண்ணையும், தன் கணவரையும் செருப்பால் அடிப்பதாக நினைத்து, காரின் முன் பக்க கண்ணாடியில் அடித்துள்ளார். இதனால், அந்த பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, அந்த வழியாகச் சென்றவர்கள் அனைவரும், அந்த சாலையைக் கடந்து செல்லாமல், தங்கள் வாகனத்தை நிறுத்துவிட்டு, இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதனால், அங்குப் போக்குவரத்து போலீசார் வந்துகொண்டிருந்தனர். அந்த நேரத்தில், தன் கணவரின் காரின் அருகில் ஓடிச் சென்று, தன் கணவனை காரிலிருந்து வெளியெ இழுத்த அந்த பெண், நடு ரோட்டிலேயே தன் கணவரைத் தாக்கி உள்ளார்.

அதன் பிறகு, அங்க வந்த போலீசார், 3 பேரையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய குற்றத்திற்காக, அந்த பெண்மணிக்கு போலீசா்ர அபராதம் விதித்தனர்.

மேலும், இது குறித்துப் பேசிய போலீசார், “ தன் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனைத் தாங்க முடியாத ஆதங்கத்தில், அந்த பெண் இவ்வாறு நடு ரோட்டில் சண்டை போட்டுள்ளார். இது, குடும்ப பிரச்சனை தான். இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்.

ஆனால், காரை மறித்து அந்த பெண் நடு ரோட்டில் சக்களத்தி சண்டை போட்ட காட்சியை அங்கு நின்றவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இதனையடுத்து, அந்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.