பெற்ற 3 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு 16 வயது சிறுவனுடன் 29 வயதான தாய் ஓடிப்போன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஒரு இளம் தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தற்போது அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகு, கணவன் மனைவி இருவரும் எப்போதும் போலவே மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். இதில், அவரது மனைவிக்கு தற்போது 29 வயது ஆகிறது.

இப்படியான சூழ்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவனுடன், அந்த 29 வயதான மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் நட்பாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்கள் இருவருக்குள்ளும் வயது வித்தியாசம் இன்றி, இன்னும் நெருக்கம் அதிகரித்து, இருவரும் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், தனது மனைவியின் நடத்தையில், அவரது கணவனுக்கு சற்று சந்தேகம் எழுந்த நிலையில், அதனை மனது மனைவியிடம் மேலோட்டமாகவே பேசியிருக்கிறார். ஆனால், இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அவரது 29 வயதான மனைவி, அந்த 16 வயது சிறுவனுடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது, அந்த சிவராத்திரி விழாவின் நிகழ்வுகளைப் பயன்படுத்திக்கொண்டு, அன்றைய இரவு அந்த 29 வயது பெண்ணும், அவருடன் பழகி வந்த குறிப்பிட்ட அந்த 16 வயது சிறுவனும் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இருவரின் குடும்பத்தினரும், அவர்கள் இருவரையும் அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில், சிறுவனின் குடும்பத்தார் அங்குள்ள காம்பீர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். சிறுவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட அந்த பெண்ணின் மீது ஆள் கடத்தல், நபரை அடைத்து வைத்தல், ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், “மாயமான பெண் மற்றும் அந்த சிறுவன் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக நெருக்கிப் பழகி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், அவர்கள் இருவருக்கும் உள்ள வயது இடைவெளி காரணமாக அவர்கள் மீது அக்கம் பக்கத்தினருக்குத் துளியும் சந்தேகம் வரவில்லை என்றும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதே போல், அந்த பெண்ணின் கணவர் பேசும் போது, “எனது 3 குழந்தைகளுக்குத் தாயான என் மனைவி இப்படி செய்வாள் என்று நான் கனவிலும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று, கவலையுடன் கூறியுள்ளார்.

அத்துடன், “அவர்கள் இருவரும் சில காலமாகவே நெருங்கிப் பழகி வ்நதனர் என்றும், என் மனைவியின் நடவடிக்கைகள் சற்று மாறியிருந்தது என்றும், இதனை நான் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இப்படியான நிலையில் தான், இது போன்று நடந்திருக்கிறது என்றும், ஆனால், இப்படி நடக்கும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை” என்றும், பாதிக்கப்பட்ட கணவன் கண்ணீருடன் தெரிவித்து உள்ளார். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.