தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி, கள்ளக் காதலன் உடன் உல்லாச இன்பத்தில் இருந்ததை நேரில் பார்த்த கணவன், அந்த காதலனின் ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 40 வயதான மனைவி அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 46 வயதான கணவன் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் வசித்து வந்தார். 

இந்த தம்பதிக்குத் திருமணம் ஆகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், மிகவும் மகிழ்ச்சியாகவே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இப்படியான சூழலில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சரவணன் - அமுதா இடையே கருத்துவேறுபாடு அதிகரித்த நிலையில், “இனியும் சேர்ந்து வாழ முடியாது” என்று முடிவெடுத்த இருவரும், “விவாகரத்துக்குக் கேட்டு நீதிமன்றத்தில் மனு” தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, அவரது மனைவி கணவன் வீட்டிலிருந்து வெளியேறி, அந்த பகுதியில் வேறொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பின்னர், அவரது மனைவி அமுதா, தனது காதலன் உடன் அங்குள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் உள்ள முண்டன் கவி என்ற பகுதியில் தனியாக வீடு என்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

அப்போது, மனைவியின் காதல் விசயமும், தன்னை தன் மனைவி அமுதா பிரிந்து சென்றதற்காகக் காரணமும் அவரது கணவன் சரவணனுக்குத் தெரிய வந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கணவன் சரவணன், தன்னை பிரிந்து சென்ற மனைவியைத் தேடிச் சென்று உள்ளார்.

அத்துடன், தனக்குத் துரோகம் செய்த தனது மனைவியையும், அந்த கள்ளக் காதலனையும் அவர் பழி வாங்கத் துடித்து உள்ளார். இதற்காக, ஒரு புதிய துப்பாக்கியையும் அவர் அதிக விலை கொடுத்து வாங்கி வந்திருந்து உள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவி வசிக்கும் வீட்டைத் தேடிச் சென்ற அவர், அந்த வீட்டையும் கண்டுபிடித்து அந்த வீட்டிற்கு மிகவும் ரகசியமாகச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த வீட்டிற்குள் நுழைந்த கணவன் சரவணன், அந்த வீட்டில் ஒரு மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார். 

அப்போது, தனது மனைவியுடன், அவரது கள்ளக் காதலன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். இதனை நேரில் பார்த்த கணவன் சரவணன், கடும் ஆத்திரமடைந்து தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, “அது இருந்தால்தானே அலைவே, இனி நீ என்ன பண்றேனு நான் பார்க்கிறான் டா” என்று சத்தமாகக் கத்திக்கொண்டே, அந்த காதலனின் ஆணுறுப்பைப் பார்த்து சுட்டுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்ததைப் பார்த்த சரவணன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து, படுகாயம் அடைந்த காதலனை அங்குள்ள மருத்துவமனையில் அமுதாவே அனுமதித்து உள்ளார். அங்கு, அவருக்கு தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி, கள்ளக் காதலன் உடன் உல்லாச இன்பத்தில் இருந்ததை நேரில் பார்த்த கணவன், அந்த காதலனின் ஆணுறுப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கேரளா மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.