காதலியுடன் ஊர் சுற்றும்போது வசமாக சிக்கிய கணவனை, நடு ரோட்டில் வைத்தே மனைவி எகிறி எகிறி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மீரட் பகுதியில் அட்னன் - ஆயிஷா தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாக வாழத் தொடங்கியது முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, திருமணம் ஆனது முதல் கணவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் அவரது நடத்தையில் மனைவி ஆயிஷாவுக்கு சந்தேகம் வழுத்து உள்ளது. 

அத்துடன், திருமணம் ஆன நாள் முதல் கணவன் அட்னன், அவரது மனைவியிடம் துளியும் நெருக்கம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறார் என்று, கூறப்படுகிறது. இதனால், கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்திருக்கிறது.

அந்த நேரத்தில் பக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், “உன் கணவனுக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்றும், அதனால் தான் அவர் உன்னுடன் நெருக்கமா இருப்பது இல்லை” என்றும், தங்களது பங்கிற்கு கூறி உள்ளனர். 

அக்கம் பக்கத்தினர் சொல்வதை கேட்ட மனைவி ஆயிஷாவும், அதன் பிறகு சந்தேகம் வழுத்து உள்ளது. எனினும், தனது கணவனை ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று அதற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்து எதிர் நோக்கி இருந்து உள்ளார். 

அதன் படி, நேற்று முன் தினம் 15 ஆம் தேதி, கணவன் அட்னன், எப்போதும் போல காலையில் வேலைக்குச் சென்று உள்ளார். அப்போது, கணவன் அட்டினுக்கே தெரியாமல் அவரது மனைவி ஆயிஷா, அவரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

அப்போது, அவர் மீரட்டில் உள்ள சாஸ்திரி நகர் மார்க்கெட்டிற்கு சென்று உள்ளார். “தனது கணவன் அட்னன், அங்கே ஏன் செல்கிறார்?” என்று, அவரது மனைவிக்கு ஒரே குழப்பம். 

அப்போது, அவர் பின்னாடியே அவர் மனைவி சென்று பார்த்த போது, அங்கே, அட்னனுக்கா காத்திருந்த பெண் ஒருவருக்கு, அங்குள்ள ஜவுளி கடையின் உள்ளே சென்று, தனது காதலிக்கு டிரெஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

இவற்றை எல்லாம் வெளியே நின்று அவரது மனைவி ஆயிஷா, கவனித்துக் கொண்டு இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, கடையின் உள்ளே டிரெஸ் எடுத்துக்கொண்டு சந்தோசத்துடன் சிரித்துப் பேசிக்கொண்டே கடையை விட்டு இருவரும் வெளியே வந்த இருவரின் முன்பும், ஆயிஷா எதிரில் வந்து நின்று உள்ளார். ஆயிஷாவை பார்த்த, அவரது கணவனுக்கும், கணவனின் காதலிக்கும் கடும் அதிர்ச்சி. இருவரும் அப்படியே, ஒன்றும் புரியாமல் அதே இடத்தில் அப்படியே உரைந்து போய் நின்று உள்ளனர். 

அப்போது, எதிர் முனையில் கடும் ஆவேசத்தில் நின்றிருந்த ஆயிஷாவை பார்த்ததும், கணவன் அட்னன் காதலி அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

இதனையடுத்து, கணவனை நோக்கி மிகவும் ஆவேசமாக வந்த ஆயிஷா, நடு ரோடு என்றும் பார்க்காமல் தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, தனது கணவனை எல்லோரும் முன்பும் எகிறி எகிறி அடித்து, வெளுத்து வாங்கிவிட்டார். 

அப்போது, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனாலும், தன் கணவனை விடாமல், அவரை அடி புரட்டி எடுத்து விட்டார். இது தொடர்பாக, அங்கிருந்தவர்கள், அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தி, கணவன் - மனைவி இருவரையும் சமாதானப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, இருவரையும் ஒன்றாக போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும், இது தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்ட புகைப்படம், தற்போது வைரலாகி வருகிறது.