5 வயது ஆண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கள்ளக் காதலனுடன் உடன் மனைவி ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.

மும்பை சாக்கி நாக்கா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர், அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட அந்த பெண்ணின் கணவர், அங்குள்ள ஷீரடியில் நடந்த உறவினரின் திருமணத்திற்குச் சென்றுவிட்டார். ஆனால், தனது மனைவியை மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்லாத நிலையில், அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து, உறவினரின் திருமணத்திற்குச் சென்று விட்டு மறுநாள் காலையில் அந்த கணவர் வீடு திரும்பி உள்ளார். 

அப்போது, வீட்டில் பெண் குழந்தைகள் 3 பேர் மட்டும் வீட்டில் இருந்து உள்ளனர். அத்துடன், வீட்டில் இருந்த மனைவி மற்றும் 5 வயது ஆண் குழந்தையைக் காணவில்லை. இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அவர், “அம்மா எங்கே?” என்று, தனது 3 பிள்ளைகளிடமும் விசாரித்து உள்ளார்.

அப்போது “அம்மா, தம்பியுடன் வெளியில் சென்று விட்டு, இன்னும் வீடு திரும்பி வரவில்லை” என்று, சோகத்துடன் கூறி உள்ளனர்.

இதனால், சற்று சந்தேகமடைந்த கணவன், அங்குள்ள அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது, மனைவி அங்குள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்த கள்ளக் காதலனுடன் மாயமானது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை அங்குள்ள பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால், எங்குத் தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், வேறுவழியின்றி கள்ளக் காதலுடன் சென்ற மனைவியை மீட்டுத் தருமாறு, அந்த அப்பாவி கணவன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 பெண் பிள்ளைகள் மற்றும் கணவனைத் தவிக்க விட்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.