தி.மு.க அரசின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது-முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

தி.மு.க அரசின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது-முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு. - Daily news

திமுக அரசின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

floodsதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவந்தது . கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பல நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும்  பல்வேறு கட்சித் தலைவர்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பார்வையிட்டனர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை சென்னையில் தனித்தனியாக  வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கிவந்தனர். இந்நிலையில் இன்று ஒன்றாக மழை பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்டனர்.


இதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், மழையால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.  


இந்நிலையில்  செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி  கூறியதாவது: திமுக அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மேலும் கடந்த பத்தாண்டுகளாக நாங்கள் அனைத்துமே செய்துள்ளோம். பத்து நாளோ பத்து மாதமோ மக்கள் பாதிக்காமல் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனைதொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக இணைஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்கவில்லை.

Leave a Comment