ஓட்ட பந்தய வீராங்கனை ஜோத்சனா ராவத்திடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்த பிரபல ஓட்ட பந்தய வீராங்கனையான 17 வயதான ஜோத்சனா ராவத், அங்குள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது பள்ளி பருவத்திலேயே உலகின் மிக கடினமான ஓட்டங்களில் ஒன்றான La Ultra (லா அல்ட்ரா) ஓட்டப் பந்தயத்தை ஓடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையையும் தனதாக்கிய மாபெரும் திறமை சாலி ஆவார். 

இந்த La Ultra (லா அல்ட்ரா) ஓட்டப் பந்தயமானது, மிக உயரப் பகுதிகளில் நீண்ட தூர மாரத்தான் அல்லது கடினமான மற்றும் மிகவும் சவாலான சகிப்புத்தன்மை மிக்க பந்தயங்களில் ஒன்றாக உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியான, சவால் நிறைந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு பரிசுப் பெற்ற ஒரு திறமைசாலி ஆவார்.

இப்படியா நிலையில், 17 வயதான ஓட்ட பந்தய வீராங்கனையான ஜோத்சனா ராவத், டேராடூனில் தனது தோழி ஒருவருடன் ஓட்டபந்தையை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று, அவரை பின் தொடர்ந்து வந்து உள்ளது. ஒரு கட்டத்தில், அந்த காரில் வந்த நபர், ஜோத்சனா ராவத்திடம் திடீரென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கூறிய ஜோத்சனா ராவத், “நான் எனது தோழியுடன் ஓட்டபந்தைய பயிற்சியில் ஈடுபட்டு இருந்தேன். அப்போது, காரில் வந்த ஒரு நபர், எனது அருகில் வந்ததும் காரை நிறுத்தி விட்டு, ஆபாச மற்றும் மிகவும் வக்கிரமான வார்த்தைகளைக் கொண்டு என்னைப் பேசி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நான், அந்த நபரை நோக்கி சத்தம் போட்டேன். அந்த நபர், சிறிது நேரத்தில் மீண்டும் என்னிடம் வந்து மீண்டும் தகாத முறையில் நடந்து கொண்டார்.  இதனால், நான் கடும் அதிர்ச்சியடைந்து அந்த காரை நோட்டமிட்டேன். அப்போது, அந்த காரில் 60 வயது மதிப்புடைய ஒரு பெண்மணியும் அதில் இருந்தார்” என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய உத்தரகாண்டின் டிஜிபி அசோக் குமார், “சமூக ஊடகங்கள் வழியாகவே ஜோத்சனா என்னைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்” என்று, கூறியுள்ளார். 

“அதனால், இதனை நான் தன்னிச்சையான விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

மேலும், “காரில் வந்த அந்த நபர், காரை அந்த பெண்ணின் பின்புறம் நிறுத்தி விட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று ஜோத்சனா புகாராகக் கூறினார்” என்றும், தெரிவித்து உள்ளார். 

“இது தொடர்பாக, ராய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யும் படி நான் ஜோத்சனாவிடம் கேட்டுக் கொண்டேன் என்றும், அதன் படி, அவர் புகார் 
அளித்திருப்பதாகவும்” அவர் கூறினார். 

“இந்த விவகாரம் பற்றி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர் என்றும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.