டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை இருவர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி காசியாபாத் பகுதியைச் சேர்ந்த 22 வயதான திருமணம் ஆன இளம் பெண் ஒருவர், தனது கணவன் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அத்துடன், அந்த பெண், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

தற்போது, தலைநகர் டெல்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அந்த பெண் மீண்டும் வேலை தேடி அலைந்ததாக தெரிகிறது. இதனால், பல புதிய நிறுவனங்களை அவர் அனுகியதாகவும் தெரிகிறது.

இந்த சூழலில், அந்த பெண்ணுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிய செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 

அப்போது, எதிர் முனையில் பேசிய நபர், “நான் ரோகித்” என்று, தன்னை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார்.

அத்துடன், “எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் வேலை இருக்கிறது என்றும், அவர் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய அந்த பெண், அந்த நபரை சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் படி, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பாக இருவரும் பேசியிருக்கிறார்கள்.

நீண்ட நாள்களாக வேலை தேடி வந்த அந்த பெண்ணும், “தனக்கு எப்படியும் வேலை கிடைத்து விடும்” என்ற நம்பிக்கையில், தான் சொன்ன இடத்தில் வந்து நின்றுருக்கிறார்.

அதன் படி, மறுநாள் அந்த பெண் சொன்ன இடத்திற்கு வந்த அந்த நபர், தன்னுடன் மற்றொரு நபரையும் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த நபரும் அலுவலகத்தில் பணியாற்றுபவர் என்று நினைத்துக்கொண்டு அந்த பெண் நிற்க, அந்த பெண்ணை தனது காரில் ஏறச் சொல்லியிருக்கிறார்.

இதனால், அந்த பெண்ணும், அந்த காரில் ஏறியிருக்கிறார். இதனையடுத்து, அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்கள் 3 பேரும் காரில் சென்றுகொண்டிருந்த நிலையில், காரில் இருந்த இருவரும் திடீரென அந்த பெண் மீது பாய்ந்து பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

அப்போது, அவர்களைத் தடுத்து அந்த பெண் அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். இதனால், கோபம் அடைந்த அவர்கள், அந்த பெண்ணை கொடூரமாகத் தாக்கி, “கொலை செய்துவிடுவோம்” என்று, மிரட்டியே இருவரும் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாலியல் வெறியெல்லாம் முடிந்த பிறகு, அந்த பெண்ணை ஒதுக்குப் புறமாக இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.