வெறும் 7 லட்சம் ரூபாய்காக  தாய், தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாட்டம் தேவகோட்டை அருகில் உள்ள கண்ணங்கோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் - வெள்ளையம்மாள் தம்பிகளுக்கு சோனைமுத்து என்ற மகன் உள்ளார்.

murders parents

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேலிருந்து கம்பி விழுந்து ஆறுமுகம் உயிரிழந்தார். அதேபோல், 6 மாதங்கள் கடந்த நிலையில், சோனைமுத்துவின் தாயார் வெள்ளையம்மாளும் உயிரிழந்தார். அவர் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறி, அவரையும் சோனைமுத்து அடக்கம் செய்துள்ளார்.

இதனையடுத்து, சோனைமுத்துவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், ஆறுமுகம் - வெள்ளையம்மாள் தம்பிகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சோனைமுத்துவை தனியாக அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்துள்ளனர். 

murders parents

அப்போது, திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை போடுவதற்காக ஆறுமுகத்திற்குச் சொந்தமான இடம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கு நஷ்ட ஈடாக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் ஆறுமுகம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த பணத்தை எடுப்பதற்காக, முதலில் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, 6 மாதங்களுக்குப் பிறகு, கழுத்தை நெறித்து தாயையும் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பணத்திற்காகத் தாய் - தந்தையைக் கொலை செய்த சோனைமுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு இதே பகுதியில் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.