ஜிமெயில் மற்றும் டிரைவ் போன்ற கூகுள் சேவைகள் வியாழக்கிழமை காலை (இன்று) இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும் செயலிழப்பை சந்தித்தன. பல ஜி சூட் சேவைகளுடன், குறிப்பாக ஜிமெயில் சேவையுடன் இணைவதில் சிக்கல்களை சந்தித்ததை பயனர்கள் அதை புகாரளிக்க டிவிட்டர், பேஸ்புக் போன்ற பல வகையான சமூக ஊடகங்களுக்குள் புகுந்தனர்.

இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் ஜிமெயில், கூகுள் டிரைவ் பயன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

கூகுளின் பல்வேறு சேவைகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சில மணி நேரங்களாக ஜிமெயிலில் இணைப்புகளை அனுப்பும்போது பல சிக்கலை எதிர்கொள்வதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூகுள் ஆப்ஸ் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து சேவையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கூகுள் மீட், கூகுள் வாய்ஸ் மற்றும் கூகுள் டாக்ஸ் ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜிமெயில் சேவை முடங்கியது குறித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களில்  #gmaildown என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். 

செயலிழப்புகளைக் கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் போர்ட்டல் (Down Detector portal) 62 சதவிகித மக்கள் அட்டாச்மென்ட் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன மற்றும் லாக்-இன்களில் 25 சதவிகித மக்கள் சிக்கல்களை சந்தித்து உள்ளனர்.

எவ்வாறாயினும், எல்லோரும் செயலிழப்பால் பாதிக்கப்படவில்லை, அதே சமயம் இந்த செயலிழப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ஜிமெயில் மற்றும் கூகுள் டிரைவ் ஆகியவற்றில் நிகழ்ந்த இந்த சிக்கல் குறித்த அறிக்கைகள் தங்களுக்கு கிடைத்ததாக Google ஆப்ஸ்களின் ஸ்டேட்டஸ் பக்கம் உறுதிப்படுத்தியது. அதன்படி 11 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் பிரபலமான மின்னஞ்சல் சேவையில் செய்திகளைப் பெறுவதில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

கூகுள் நிறுவனம் இந்தப் பிரச்சினையை ஒப்புக் கொண்டுள்ளது, “ஜிமெயிலுடன் ஒரு சிக்கல் குறித்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். மேலதிக தகவல்களை விரைவில் வழங்குவோம்” என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், இந்த ஜிமெயில் பின்னடைவால் புகார் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தளத்தில் நிறைய ஜிமெயில் பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும் கோப்புகளை இணைக்கவும் முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.