கோவையில் 14 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, 26 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 

கோயம்புத்தூர் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான சிவலிங்கம், திருமணம் ஆகாத நிலையில், வேலைக்கு எதுவும் செல்லாம் சும்மாவே அந்த பகுதியில் சுற்றித் திரிந்துகொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியை தன் காதல் வலையில் வீழ்த்த படாத பாடு பட்டுள்ளார். பல மாதங்களாக, அந்த பெண்ணை அடிக்கடி பார்த்து, தன் காதல் வலையில் வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ, சில தில்லாலங்கடி வேலையெல்லாம் பார்த்து, அந்த சிறுமியை தன் காதல் வலையில் வீழ்த்திய சிவலிங்கம், அதன் பிறகு அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டி உள்ளார். திருமண ஆசை காட்டியதின் உச்சமாக, அந்த சிறமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. சிறுமிக்கும் லேசாக டவுட் வந்த நிலையில், தொடக்கத்தில் தன் பெற்றோரிடம் மறைக்கப் பார்த்து உள்ளார். ஆனால், ஒட்டு கட்டத்திற்கு மேல் சிறுமியால், தன் பெற்றோரிடம் மறைக்க முடியவில்லை. 

இதனால், சிறுமியின் உடல் நலக்குறைவு குறித்து, சிறுமியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால், சிறுமி சரிவரப் பதில் கூறவில்லை என்று தெரிகிறது. சிறுமிக்கு ரொம்பவும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சிறுமியை அவரது பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இதனைக் கலைக்க முடியாது என்றும், மீறி கலைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்” என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அழுது கொண்டே தன்னுடைய காதல் கதையைக் கூறி உள்ளார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். இரு வீட்டாரும் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், வரும் 21 ஆம் தேதி சிறுமிக்கும், அந்த இளைஞனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இது தொடர்பான தகவல் ஊர் முழுவதும் பரவிய நிலையில், போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விரைந்து வந்து, சிவலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, அவரை சிறையில் அடைந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.