கள்ளக் காதலியை 2 வது திருமணம் செய்யத் திட்டமிட்ட கள்ளக் காதலன், தன் தாய், மனைவி, 3 மகள்களைக் கொலை செய்து விட்டு வீட்டையே கொளுத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அதிசயங்கள் கொண்ட எகிப்து நாட்டில் தான், இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணம் ஆன ஒருவருக்கு மொத்தம் 4 பெண் பிள்ளைகள் இருந்துள்ளன. அவரது குடும்பத்தில், தாய், மனைவி, 4 மகள்களுடன் வாழ்ந்து வந்த அந்த நபருக்கு, ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில், தன் கள்ளக் காதலியை அவர், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, தன் கள்ளக் காதலியிடம் அவர் இது குறித்துக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த கள்ளக் காதலியோ, “என்னுடைய கணவனை விவகாரத்து செய்து விட்டு வருவகிறேன். அதன் பிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக இருக்கலாம்” என்று கூறியுள்ளார். அத்துடன், விவகாரத்திற்கான பணிகளை இப்போதே மேற்கொள்வதாகவும், அந்த கள்ளக் காதலி கூறியுள்ளார்.

ஆனால், தனக்கு 4 பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் தன்னுடன் வீட்டில் இருக்கும் தன் அம்மா பற்றி அவர் யோசித்துள்ளார். அதன் படி, அவர்கள் 6 பேரையும், அவர் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன் படி, சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டுத் தூங்கச் சென்றுள்ளனர். இதனையடுத்து, தன் தயார் மற்றும் தன் மனைவியை அடுத்தடுத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகத் தெரிகிறது. அவர்கள் 2 பேர் இறந்ததும், கொஞ்சம் கூட இறக்கம் இல்லாத அந்த மனித மிருகம், கள்ளக் காதலியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காம வெறியில் தன்னுடைய 4 பெண் பிள்ளைகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

இதில், 4 வது பெண் பிள்ளையின் கழுத்தைத் திருவி, அங்கேயே வீசி உள்ளார். இதில், அந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து, வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை திறந்துவிட கிச்சன் அறையிற்குள் சென்றுள்ளார். அதற்குள், அந்த 4 பெண் குழந்தை, சாகாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அங்கு நடப்பதை உணர்ந்துகொண்டு, தப்பித்தால் போதும் என்று பயந்துகொண்டு, வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார்.

ஆனால், தனது குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்த அந்த நபர், கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு, வீட்டையே தீ வைத்துக் கொளுத்தி உள்ளார். வீடு தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவ முன் வந்துள்ளனர். 

மேலும், போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் விரைந்து வந்துள்ளனர்.

அப்போது, உயிர் பிழைத்துத் தப்பி ஓடிய அந்த 4 பெண் குழந்தை, நடந்ததை போலீசாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால், அந்த ஊர் மக்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசா், குடும்பத்தைக் கொலை செய்த அந்த நபரை போலீசார் அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து அவரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அந்த நபரின் கள்ளக் காதலி குறித்த தகவல்களையும் போலீசார் சேகரத்து, அவரையும் கைது செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இரண்டாவது திருமணம் செய்வதற்காகத் தாய், மனைவி, 3 மகள்களைக் கொலை செய்து விட்டு வீட்டையே தீ வைத்துக் கொளுத்திய சம்பவம், எகிப்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.