புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நொடியூர் கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில், 13 வயதான வித்யா என்ற சிறுமி மர்மமான முறையில்  கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 

Woman wizard arrested in Nirupali case

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அதிரடி திருப்பமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காகப் பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, தன் சொந்த மகளை, நரபலி கொடுத்ததாக தந்தையே போலீசாரிடம்  வாக்குமூலம் அளித்தார். 

Woman wizard arrested in Nirupali case

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தங்களது விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட நிலையில், பெண் மந்திரவாதி தலைமறைவானார்.

அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ள குறிப்பிடத்தக்கது.