காதலை ஏற்காத சிறுமியை, ஒரு தலை காதலன் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பட்டிபுலம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வசிக்கும் ஜெயராஜ், அப்பகுதியில் கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய  17 வயது மகள் லாவண்யா தான், இந்த ஒரு காதலுக்கு காவு கொடுக்கப்பட்டவர் ஆவர்.

Mamallapuram girl murdered for One sided love

ஜெயராஜிடம், ஆந்திராவைச் சேர்ந்த துர்க்காராவ் என்ற இளைஞர், கடந்த 6 மாதங்களாகக் கொத்தனாராகப் பணியாற்றி வந்துள்ளார். 
வேலைக்குச் சேர்ந்தது முதல், ஜெயராஜின் மகளை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் பலமுறை தன்னுடைய காதலை துர்க்காராவ் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அந்த சிறுமி காதலை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த துர்க்காராவ், சம்பவத்தன்று சிறுமியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

அப்போது, வழக்கம் போல், தன் காதலைச் சொல்லி, சிறுமிக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது, சிறுமி விடாப்பிடியாக மறுத்துவிடவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சிறுமியைக் கழுத்து, வயிறு என்று சரமாரியாகக் கத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். 

Mamallapuram girl murdered for One sided love

இதில், வலியால் அலறித்துடித்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள், உடனடியாக சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு தலை காதலனைக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.