பைத்தியக்காரன் வேஷத்தில் 2 கொலைகள் செய்த சைக்கோ ரேப்பிஸ்ட் அதிரடியாகக் கைது செய்யப்பட்டான்.

வீட்டில் உள்ள சிறுவர் சிறுமிகளைத் தனியாக விடக்கூடாது என்பதற்கும், அவர்கள் வெளியில் விளையாடினால் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் என்பதற்கும் உதாரணம் சொல்லும் ஒரு நிகழ்வுதான் தற்போது நிகழ்ந்துள்ளது.

Chennai Psycho rapist and murderer arrested

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு முத்தாலபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ், அந்த பகுதியின் டிப்டாப் ஆசாமி. ஆனால், அவன் மனநோயாளி போல் நடந்துகொள்வதால், அவனை ஊரில் உள்ளவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

ஆனால், இந்த பைத்தியக்காரன் வேஷத்தில் அவன் இதுவரை 2 பாலியல் கொலைகளைச் செய்திருக்கிறான் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தாலபுரத்தில் 
உள்ளாட்சித் தேர்தல் நடந்த போது, அந்த பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் உறவினரின் 6 வயது மகன், காணாமல் போய் உள்ளான்.

இரவு முழுவதும் அந்த சிறுவனை அந்த ஊர்மக்கள்  தேடி உள்ளனர். அப்போது, அந்த சிறுவன் அருள்ராஜ் உடன் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், விரைந்து வந்த போலீசார், அருள்ராஜிடம் விசாரித்துள்ளான். அப்போது, அந்த சிறுவன் தன்னை பின் தொடர்ந்து வந்ததால், ஆத்திரத்தில் காலால் மிதித்துக் கொன்றதாகக் கூறியுள்ளான்.

இதனையடுத்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், சிறுவனின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

மேலும், சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுவன் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் தங்களது பாணியில் அருள்ராஜிடம் விசாரணை மேற்கொண்டதில், பாலியல் ரீதியில் சிறுவனிடம் அத்துமீறி முயன்றபோது, சிறுவன் கத்தியதால், கொன்றதாக அருள்ராஜ் கூறியுள்ளான்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது பாட்டி ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்து, அதன் பிறகு கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, இது போன்று வேறு எதுவும் குற்றச் செயல்களில் அருள்ராஜ் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chennai Psycho rapist and murderer arrested

இதனிடையே, பைத்தியக்காரன் வேஷத்தில் 2 கொலைகள் செய்த சைக்கோ ரேப்பிஸ்ட் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.