வேறொருவர் மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்த பொறியாளர் எரித்துக்கொலை செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழியை சேர்ந்த 42 வயதான சக்திவேல், கடந்த 15 வருடங்களுக்கு முன்பு, விதவை பெண் அழகுமணி என்பவரை, காதலித்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Coimbatore engineer gets murdered for affair

இதனிடையே, சக்திவேல் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதனையடுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அங்கிருந்து விலகி கோவையில் பணியாற்றி வந்தார்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் சமீப காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதனால், சக்திவேல் துணையின்றி தனிமையில் தவித்து வந்தார். அப்போது, அருகில் உள்ள திருமணமான பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர்.

இதனையடுத்து, இருவருக்குள்ளும் பழக்கம் அதிகமானதை அடுத்து, இருவரும் சக்திவேல் வீட்டில் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த தகவல் எப்படியோ, அந்த பெண்ணின் கணவருக்குத் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் சக்திவேலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Coimbatore engineer gets murdered for affair

இருவரும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களது கள்ளக் காதலை மேலும் தொடர்ந்து, அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவருக்கும், அவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை, அந்த பகுதியிலிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதனிடையே, அடிக்கடி தனது அக்காவிடம் பேசிவந்த சக்திவேல், கடந்த சில நாட்களாகப் பேசவில்லை. இதனால், சந்தேகமடைந்த சக்திவேலின் அக்கா, தனது மகனிடம் சொல்லி சக்திவேலை நேரில் சென்று பார்த்து வரச்சொன்னார்.

அப்போது, சக்திவேலின் அக்கா மகன் தினேஷ், கோவை வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தபோது, சக்திவேல் எரிந்த நிலையில், எழும்பு கூடாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், சக்திவேலுக்குக் கள்ளக் காதல் இருந்ததும், இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக, சக்திவேல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.