“தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, புதிதாக 'தகைசால் தமிழர்’ என்ற விருது வழக்கப்படும் என்று, முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாறிவரும் டிஜிட்டல் உலகத்தில் தமிழ் சார்ந்த விசயங்கள் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால், தமிழ் சமுகத்தின் பண்பாட்டையும், அதன் மேன்மையையும் போற்றும் விதமாக,தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” என்ற பெயரில், புதிய விருதை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். 

“தகைசால் தமிழர்” என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதுடன், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்று ஆகியவற்றை சுந்திர தின
விழாவில் முதலமைச்சர் வழங்குவார் என்றும் அரசு கூறப்பட்டு உள்ளது.

இந்த விருதாளரை தேர்வு செய்ய தமிழக முதல்வர் தலைமையில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்கவும் தற்போது தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், “தகைசால் தமிழர்” என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதானது, இனி வரும் ஒவ்வொரு ஆண்டும், சுந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது, வீரதீர
செயல்களுக்கான விருதுடன் தகைசால் தமிழர் விருதும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு தொழில் துறை, தமிழ்
ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்கள்”
என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

“ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 'தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும்,
சுதந்திர தின விழாவின் போது, முதலமைச்சரால் வழங்கப்படும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“தகைசால் தமிழர்” என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதானது, தமிழன ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.