"ரயிலில கீழ பேப்பர் விரிச்சு படுத்து.."- சாதனை பயணத்தின் ஆரம்ப ஓட்டம் பற்றி மனம் சிறந்த Stபிரிட்டோ அகாடமி Drவிமலா ராணி! வைரல் வீடியோ

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரான திரு.சேவியர் பிரிட்டோ அவர்களின் மனைவி திருமதி.Dr.விமலா ராணி அவர்கள் தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்குகிறார். மேலும் தனது கணவரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. தங்களது செயின்ட் பிரிட்டோ அகாடமி வாயிலாக காலத்தால் அழியாத கல்வி செல்வத்தை குழந்தைகளுக்கு வழங்கி வரும் திருமதி.Dr.விமலா ராணி அவர்கள் தனது சீக் பவுண்டேஷன் சார்பில் 25 கிராமங்களை தத்தெடுத்து அங்கு இருக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து வருகிறார். 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு நம்மோடு உரையாடிய செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசும் போது, தற்போது பல்வேறு துறைகளிலும் சாதித்து சாதனை பயணத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்களது வாழ்க்கையின் ஆரம்ப ஓட்டம் குறித்து டாக்டர் விமலா ராணி மனம் திறந்து பேசினார். அந்த வகையில், நீங்கள் நினைத்திருக்கிறீர்களா மதுரையிலிருந்து வந்த ஒரு கணக்கு வாத்தியாரின் மகள்... ஒரு பேராசிரியரை திருமணம் செய்து கொண்டீர்கள் லயோலா கல்லூரியில் உங்களுடைய கணவர் (திரு.சேவியர் பிரிட்டோ) வேலை பார்த்தார்... இப்போது இருக்கும் நிலைக்காக நீங்கள் கணவனும் மனைவியும் இணைந்து செய்த கடின உழைப்பு என்கிற ஒரு விஷயம்.. ஒருபுறம் இவ்ளோ சிரமப்பட்டு இருக்கிறீர்கள்.. வாழ்க்கை ஆரம்பம் ஆகும் போது குழந்தைக்காகவும் நிறைய சிரமம்ப்பபட்டு இருக்கிறீர்கள்..  தொழிலில் அவரும் (திரு.சேவியர் பிரிட்டோ) வளர வேண்டும் என நீங்கள் ஒரு பெரிய சப்போர்ட்டாக இருந்திருக்கிறீர்கள்.. மேலும் உங்களுக்கான ஒரு பொருளாதாரத்தையும் நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள்.. எனக் கேட்ட போது, 

“ஆரம்ப கட்டத்தில் தொழில் விஷயமாக பயணம் செய்யும்போது ரயிலில் மூன்றாம் வகுப்பில் தரையில் பேப்பர் விரித்து படுத்து பயணம் செய்த காலம் எல்லாம் உண்டு. திடீரென கிளம்ப வேண்டிய சூழ்நிலை வந்து அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்துக்கொண்டு பெங்களூரு பயணிக்கும் சமயத்தில் எல்லாம் அவர் அப்படி தான் பயணிப்பார். நானும் அவரோடு சாப்பாடெல்லாம் கட்டிக்கொண்டு ரயிலுக்காக ஓடி இருக்கிறேன் இது எல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். மேலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை காதலிக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் வாழ்க்கை மொத்தமாக ஒரு வேறு ஒரு வழியில் இருக்கும். நம்மை காதலித்து பிடித்து நாம் ஒரு வாழ்க்கையை வாழும்போது நம்மை சுற்றி இருக்கும் எல்லாமே நமக்கு அழகாக தெரியும் நல்லதாய் தெரியும்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களையும் தங்களது சாதனை பயணத்தின் அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்ட டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த சிறப்பு பேட்டியின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

Leave a Comment