"3 குழந்தைகளை இழந்த போதும் நெகட்டிவிட்டிகளை பாசிட்டிவாக பார்ப்பது எப்படி?"- செயின்ட் பிரிட்டோ அகாடமி Dr.விமலா ராணியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்குபவர் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள்.கடின உழைப்பின் அடையாளமாய் விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் டாக்டர்.விமலா ராணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேகமாக சிறப்பு பேட்டி வழங்கினார். அந்த பேட்டியில் பேசும் போது தொடர்ந்து குழந்தைகளுக்கு தேவையான சிறந்த பாட முறைகளை உலகத் தரத்தில் வழங்க இப்படி எல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என எந்த இடத்தில் உங்களுக்கு தோன்றியது?” எனக்கேட்டபோது, “எனக்கு பொதுவாக இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என தோன்றியது எங்கே என்றால்? நான் எனது குழந்தையை இழந்து விட்டேன். என்னுடைய முதல் இரண்டு குழந்தைகளை இழந்து விட்டேன் மூன்றாவது தான் என்னுடைய மகள் அதன் பிறகு மீண்டும் நான் இன்னொரு குழந்தையை இழந்து விட்டேன் அதன் பிறகு தான் என்னுடைய மகன். பிரசவத்தின் சில கடினங்கள் ஒரு குழந்தை பிறந்த பிறகு இறந்தது. எனது இதெல்லாம் எனக்கு ஏதோ ஒரு செய்தி சொல்வதாக நினைத்தேன்." என்றார். 

தொடர்ந்து அவரிடம் பேசும் போது “நீங்கள் அடித்தளத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இப்போது நீங்கள் குழந்தைகளுக்காக நிறைய செய்கிறேன் என சொல்கிறீர்கள் ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறேன் ஒரு புத்தகம் எழுதுகிறேன் என குழந்தைகளுக்காக நிறைய செய்வதாக சொல்கிறீர்கள் அதை ஏன் என்று பார்த்தால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளை பிரசவத்தின் போது இழந்திருக்கிறீர்கள்... நீங்கள் இந்த இடத்தில் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கிறீர்கள் இதுகுறித்து கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் நம் சமூகத்தில் குழந்தை என்பதை சொல்லி, கல்யாணம் ஆகிவிட்டால் குழந்தை என பெண்களை வாட்டி எடுக்கிறது. அதுவும் குழந்தை இல்லை அல்லது இறந்து விட்டது என்றால் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என சொல்லலாம் அந்த தருணங்களை நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள்? என கேட்டபோது, 

“எனக்கும் அப்படித்தான் அந்த சூழ்நிலையில் கேள்விகள் வந்தன ஆனால் அப்படி கேள்விகள் வரும்போது அதை எல்லாம் நாம் எப்படி பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் யோசிக்க வேண்டும். முதல் குழந்தை ஒரு மூன்று மாதத்தில் கருவில் கலைந்து விட்டது. அப்போது நான் மிகவும் உறுதியாக இருந்தேன் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. இதுவரையில் நாம் கர்ப்பம் ஆகுமா என்றே நமக்கு தெரியாது நான் கர்ப்பமாக முடியும் என்பதே எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையாக இருந்தது. என்றார். தொடர்ந்து அவரிடம் “இது மாதிரியான சூழ்நிலையில் எல்லோரும் ஏன் எனக்கு கரு கலைந்து விட்டது என நெகட்டிவாக இருப்பார்கள் ஆனால் நீங்கள் அதையும் பாசிட்டிவாக பார்க்கிறீர்கள் அது எப்படி?” என கேட்டபோது, “நீங்கள் ஒரு சந்தேகத்தில் இருக்கிறீர்கள். இப்போது 5 பாடங்கள் தேர்வு எழுதுகிறீர்கள் ஐந்து பாடங்களிலும் தோல்வி அடைந்து கொண்டே வந்தோம் என்றால் நமக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கும். ஒருவேளை அந்த ஐந்தில் ஒன்றில் தேர்ச்சி அடைந்து விட்டு மீதி 4 தோற்று விட்டால் அந்த ஒன்று உங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கும் அல்லவா அதைத்தான் நான் எடுத்துக் கொள்வேன்.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட செயின்ட் பிரிட்டோ அகாடமியின் நிறுவனர் டாக்டர்.விமலா ராணியின் முழு பேட்டி இதோ…
 

Leave a Comment