சசிகலா அரசியல் ரீ என்ட்ரியின் முன்னோட்ட காட்சிகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்காக சசிகலா காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்குச் சென்றது வந்தது முதல், அதிமுகவில் அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

அதன் படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா தொலைப்பேசியில் பேசி வரும் உரையாடல்கள் ஒவ்வொன்றாக 
வெளியாகி வருவது, அக்கட்சியினரிடையே பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. சசிகலாவின் இந்த செயல்பாடுகள் அதிமுக தலைமைக்கான செக் வைக்கும் நடவடிக்கை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அப்படி, தொண்டர்களிடம் பேசிய ஆடியோவில், “தமிழகத்தில் ஊரடங்கு முடிந்ததும், அம்மா நினைவிடம் செல்வேன் என்றும், அங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப் பயணம் செல்கிறேன்” என்றும், அந்த சசிகலா பேசியிருந்தார்.

அத்துடன், “கட்சியை நல்லபடியாக வழி நடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்” என்றும், சசிகலா உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

அதாவது, கர்நாடக சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, சென்னை திரும்பியதும் நேரடியாக ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த முடிவு செய்திருந்தார். 

இதனை தெரிந்துகொண்ட அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, “ஜெயலலிதா சமாதியில் பழுது நீக்கம் வேலைகள் இருப்பதால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை” என்று கூறி, அதிரடியாக தடை விதித்தார். இதனால், சசிகலாவால், அப்போது ஜெயலலிதா சமாதிக்குச் செல்ல முடியவில்லை.

அதன் தொடர்ச்சியாக, தேர்தலில் வெற்றிப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இது வரை சசிகலா ஜெயலலிதா சமாதி செல்லவில்லை. தற்போது, அவர் ஜெயலலிதா ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து, தொண்டர்களைச் சந்திக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

அத்துடன், தமிழகம் முழுவதிலும் உள்ள கட்சித் தொண்டர்களை நேரடியாக சந்திக்கத் திட்டமிட்டுள்ள சசிகலா, முன்னதாக அவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவதில் உறுதியாக இருக்கிறார். 

இப்படி, ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, சசிகலா முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். இது தொடர்பாக தமிழக காவல் துறையின் அனுமதியைக் கேட்டும் சசிகலா, மனு அளிக்க உள்ளார்.

ஆனால், “சசிகலா தனி ஒருவராக சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு, போலீசாரின் அனுமதி தேவை இல்லை என்றும், ஊரடங்கு தளர்வு களையும் அவர் எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றும், அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களுடன் திரண்டு அஞ்சலி செலுத்த நினைத்தால் தான் ஊரடங்கு தளர்வுகளையும், போலீஸின் அனுமதியையும் பெற வேண்டும்” என்றும், கூறப்படுகிறது.

மேலும், கட்சி தொண்டர்களுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பதற்கும் காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு கொடுக்க இருப்பதற்கு முன்னதாக, ஊரடங்கு தளர்வுகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தால் தான், சசிகலாவின் அரசயில் ரீ என்ட்ரியின் பயணத்திற்குப் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுவதால், வரும் வாரத்தில் ஊரடங்கில் என்னென்ன தளர்வுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார் என்பதைப் பொறுத்தே சசிகலாவின் அடுத்த அரசியில் ரீ என்ட்ரி பயணம் திட்டமிடப்படும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கு தளர்வுகளுக்காக சசிகலா, தற்போது காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.