புதுக்கோட்டை அருகே கள்ளக் காதலியின் 11 வயது மகள் மீது தீராத ஆசையால், தாயின் கள்ளக் காதலன் ஒருவன் குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த  கொடூர சம்பவத்தால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை அருகே உள்ள சேங்கதோப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதான கணேசன், திருமணமாகாத நிலையில், அவரது வீட்டில் வரன் தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த புதுக்கோட்டையில் சோப்பு கம்பெனி ஏஜென்சி எடுத்து, அந்த பகுதியில் உள்ள கடைகளுக்குச் சோப்பு விநியோகம் செய்யும் வியாபாரியாக வேலை பார்த்து வந்தார்.

அதே போல், அங்குள்ள கணேஷ் நகர் பகுதியைச்  சேர்ந்த 32 வயது பெண் அமுதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பெண் குழந்தை பிறந்த அடுத்த சில மாதங்களில் அமுதாவின் கணவர், மனைவியைத் தனியாகத் தவிக்க விட்டு விட்டு, வீட்டை விட்டு ஓடி விட்டார். இதனையடுத்து, அமுதா தன் பெண் குழந்தை உடன், தனது தந்தை உடன் கணேஷ் நகர் பகுதியில் வசித்து வந்தார். 

அப்போது, சோப்பு வியாபாரம் செய்யும் கணேசன், அடிக்கடி அமுதா வீட்டிலும் சோப்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது, கணேசனுக்கும் அமுதாவிற்கும் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

குறிப்பாக, அமுதாவின் தந்தை இல்லாத நேரத்தில் அமுதா வீட்டிற்கு வரும் கணேசன், அங்கு அமுதாவுடன் தனிமையில் ஒரு உல்லாச வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அமுதாவின் 11 வயது மகள் மீது கணேசனுக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த 11 வயது சிறுமியையும் எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று, கணேசனுக்கு புத்தி தடுமாறி உள்ளது.

அதன் படி, நேற்றைய தினம் கணேசன், அமுதா வீட்டிற்கு வந்து உள்ளார். ஆனால், வீட்டில் அமுதாவும், அவரது தந்தையும் இல்லாத நிலையில், அந்த 11 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த கணேசன், கடைக்குச் சென்று குளிர்பானம் மற்றும் தூக்க மாத்திரைகளை வாங்கி மீண்டும் அமுதா வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து, தான் வாங்கி வந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரியைக் கலந்து  சிறுமிக்கு கொடுத்து உள்ளார்.

இதனைக் குடித்த சிறுமியும், அடுத்த நிமிடங்களில் தூக்கத்தில் மயங்கி உள்ளார். அப்போது, கணேசன் அந்த 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தூக்கம் கலைந்து கண் விழித்துப் பார்த்த சிறுமி, தன்னுடைய ஆடைகள் எல்லாம் கலைந்து கிடப்பதும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கிடப்பதைக் கண்டும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, இந்த அவமானம் தாங்க முடியாத அந்த 11 வயது சிறுமி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, வீடு திரும்பிய சிறுமியின் தாய் அமுதா, மகளின் இந்த செயலால் கதறி அழுதுள்ளார். அத்துடன், போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கணேசனை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக் காதலியின் 11 வயது மகள் மீது தீராத ஆசையால், தாயின் கள்ளக் காதலன் ஒருவன் குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ததால், அவமானம் தாங்காமல் அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.