சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே, தேனாம்பேட்டை காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

Chennai bomb blast commissioner of police visits

இதனிடையே, இன்று பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 2  நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில், அடுத்தடுத்து 2  நாட்டு வெடிகுண்டுகளும் வெடித்ததால், அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, அருகிலிருந்த கடையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

அத்துடன், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜ் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Chennai bomb blast commissioner of police visits

மேலும், சென்னையில் பட்டப்பகலில் 2  நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட இடத்தை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 

இதனிடையே, சென்னையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.