நாகர்கோவில் அருகே “கள்ளக் காதல் தப்பா?” என்று கேட்கும் வகையில் தன் மனைவி உடன் கள்ளக் காதலில் இருந்த சரவணனை தட்டிக்கேட்ட கணவனை, அவர் மனைவி முன்னாடியே கொலை வெறியோடு தாக்கி கோமாவுக்கு அனுப்பிய கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து உள்ள வாத்தியார்விளை, மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த 29 வயதான பார்த்திபன், 26 வயதான மனைவி ராசாத்தி உடன் வசித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சரவணன் உடன், ராசாத்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில், அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, சரவணனும் - ராசத்தியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மனைவி ராசாத்தியின் இந்த செயல்பாடு கணவன் பார்த்திபனுக்குத் தெரிய வந்தது. இதன் காரணமாக, கணவன் - மனைவிகளான பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ராசாத்தி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த கள்ளக் காதல் விசயமாக வந்த சண்டை ரொம்பவும் பெரிதானதால், ஒரு கட்டத்தில் கணவன் பார்த்தின், தன் மனைவி ராசாத்தியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனால், கடந்த 9 மாதங்களாகப் பார்த்திபன், தனது மனைவி ராசாத்தியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இப்படிப் பட்ட சூழலைக் கள்ளக் காதலர்கள் தங்களது தவறான உறவை மேலும் வளர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது. 

இந்த தகவலை அரிந்து மேலும் ஆத்திரமடைந்த பார்த்திபன், நேற்றைய தினம் கள்ளக் காதலன் சரவணனை சந்தித்து, “என் மனைவி உடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுமாறு” கூறியுள்ளார். இதனால், கவுரப் பிரச்சனையால் ஆத்திரமடைந்த சரவணன், நேரமாக மதுக் கடைக்குச் சென்று மது அருந்தி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக மது போதையில் தனது நண்பன் 28 வயதான மிக்கேல் என்பவருடன் வந்துள்ளார். அப்போது, பார்த்தின் இருசக்கர வானத்தில் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில், இங்க பார்த்திபன் மனைவி ராசாத்தி கண் எதிரிலேயே சரவணன் மற்றும் அவனது நண்பன் இருவரும் சேர்ந்து, 

பார்த்திபனை வெறித்தனமாக தாக்கி உள்ளனர். இதில், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பார்த்திபன் மயங்கி கீழே விழுந்த பிறகும், அவரை விடாமல் அங்குக் கிடந்த பொருட்களை எடுத்து, மீண்டும் மீண்டும் கொலை வெறியோடு பார்த்திபனை சரவணனும், மிக்கேலும் தாக்கி உள்ளனர். இதில், பார்த்திபன் சுய நினைவை இழந்தார்.

இந்த தாக்குதல் காட்சிகளை எல்லாம் அங்கு நின்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், சுய நினைவு இழந்து படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த பார்த்திபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பார்த்திபனுக்கு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பார்த்திபன் தற்போது சுயநினைவு இன்றி இருப்பதாகவும், இது அவருக்கு மிகவும் ஆபாத்தன கட்டம் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, கள்ளக் காதலன் சரவணன் மற்றும் அவனுக்கு உதவி செய்த அவனது நண்பன் மிக்கேல் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.