16 வயது சிறுவனுடன் 19 வயது மகள் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டதைத் தட்டிக்கேட்ட வளர்ப்புத் தந்தையை, மகளே ஆண் உறுப்பை அறுத்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாஹிம் கடற்கரை ஒட்டியில் பகுதியில் பெனட் ரிப்பளோ, தனது 19 வயது வளர்ப்பு மகள் ஆரத்யாவுடன் வசித்து வந்தார்.

mumbai murder for 19 old girl 16 year old boy love affair Issue

இந்நிலையில், வளர்ப்பு மகள் ஆரத்யா, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனைக் காதலித்து வந்துள்ளார். இருவரும், அடிக்கடி வீட்டிலேயே தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த வளர்ப்புத் தந்தை பெனட் ரிப்பளோ, வளர்ப்பு மகளைக் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த பெண், தொடர்ந்து தனது காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதனால், தந்தைக்கும் வளர்ப்பு மகளுக்கும் இடையே கடுமையாகப் பிரச்சனை எழுந்துள்ளது.

இதனையடுத்து, தனது 16 வயது காதலனுடன் சேர்ந்து, அந்த பெண் தனது வளர்ப்புத் தந்தையைக் கொலை செய்து, அவரது ஆண் உறுப்பை அறுத்து தனியாக வைத்துள்ளார். இதனையடுத்து, 3 நாட்களாக அவரது உடலைத் தனது வீட்டிலேயே வைத்திருந்த அந்த பெண், 3 நாட்களுக்குப் பிறகு, ஒரு பெட்டியில் வைத்து, இரவு நேரத்தில் அந்த உடலை மும்பை மாஹிம் கடற்கரையில் போட்டுச் சென்றுள்ளார்.

mumbai murder for 19 old girl 16 year old boy love affair Issue

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார் பெனட் ரிப்பளோ அணிந்திருந்த சட்டையின் டெய்லர் கடையின் பெயரை வைத்து, கொலை செய்யப்பட்டது பெனட் ரிப்பளோ என்பதை உறுதி கண்டுபிடித்தனர்.  

மேலும், அவர் வீட்டிற்குச் சென்றபோது, அவர் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆரத்யாவின் செல்போன் எண்ணை வைத்து, அவரை கண்டுபிடித்த போலீசார், அவரையும், அந்த பெண்ணின் 16 வயது காதலனையும் கைது செய்தனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், “நான் என் காதலனுடன் உல்லாசத்தில் இருப்பதைப் பார்த்த என் வளர்ப்புத் தந்தை, கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தன்னுடன் உறவு கொள்ளுமாறு கடுமையாகத் தொந்தரவு செய்தார். அதனால் தான் அவரை கொலை செய்தேன்” என்று வாக்கு மூலம் அளித்துள்ளார். 

mumbai murder for 19 old girl 16 year old boy love affair Issue

இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மும்பையில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.