தமிழ்நாட்டில் ஆபாச படம் பார்த்த 3000 பேரின் லிஸ்டை போலீசார் தயாரித்துள்ளனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது.

Blue flim watchers 3000 name list ready for police report

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் ஒன்று, இணையத்தளம் மூலமாக ஆபாச படம் பார்ப்பவர்கள் பற்றி ஆய்வு ஒன்று நடத்தியது. 

அதில், உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாசப்படம் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலானோர் ஆபாச படம் பார்ப்பாகவும், அதிலும் குறிப்பாக, சென்னையைச் சேர்ந்தவர்கள் தான் இன்னும் அதிகமாக ஆபாசப் படம் பார்ப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது. அதன்படி, சமீபத்தில் இணையத்தளம் மூலம் ஆபாசப் படம் பார்த்த பட்டியலைத் தமிழக போலீசார் தயார் செய்தனர்.

Blue flim watchers 3000 name list ready for police report

அதன்படி, கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் அதிக அளவில் ஆபாசம் படம் பார்த்துள்ளதாகக் கூடுதல் டிஜிபி ரவி அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளார். இதன்படி, கூடிய விரைவில் இந்த 3 ஆயிரம் பேரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இதுவரை ஆபாசப்படம் பார்த்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலங்கிப்போய் உள்ளனர்.

தற்போது, இந்த ஆபாச பட்டியல், சமூக வலைத்தளங்களில் வைரலாகவும், அதுவே பெரிய விவாத பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.