வீடியோ காலில் நிர்வாணமாக போஸ் கொடுத்துச் சபலப்பட்ட ஆண், தில்லாலங்கடி பெண்ணிடம் பணத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சபலம், ஆணுக்கும் வரும். பெண்ணுக்கும் வரும். அது ஒரு போதை!

Bangalore Nude pose on video calling police Case

அப்படி, சபலப்பட்ட ஆண் ஒருவர், ஒரு ஜகதல கில்லாடி பெண்ணிடம், தனது நிர்வாண வீடியோவையும் கொடுத்து, இலவசமாகப் பணத்தை பறிகொடுத்து ஏமார்ந்துள்ளார்.

பெங்களூரு மடிவாளா வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ராம்குமார், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில இணையதளங்களுக்குச் சென்று சபலப்பட்ட ராம்குமார், மனிஷா அகர்வால் என்ற பெண்ணுடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

இதனையடுத்து, இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பகிர்ந்த அவர்கள், பின்னர் தங்களது புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, இருவரும் நாள்தோறும் அடிக்கடி சாட்டிங் செய்தும், தொலைப்பேசி மூலமாகப் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

Bangalore Nude pose on video calling police Case

இந்நிலையில், ராம்குமாருக்கு வீடியோ கால் செய்த அந்த தில்லாலங்கடி பெண், அவரை நிர்வாணமாக நிற்கச் சொல்லியிருக்கிறார். இதில், சபலப்பட்ட ராம்குமார் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஆடைகளின்றி நிர்வாணாக போஸ் கொடுத்து நின்றுள்ளார். இதனை, அவருக்கேத் தெரியாமல், அந்த பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து, அந்த நிர்வாண வீடியோவை, ராம்குமாருகே அந்த பெண் அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் பணம் கேட்கும்போதெல்லாம் பயத்தில் கொடுத்துள்ளார். 

ஒரு கட்டத்தில், அதிகப்படியான பணத்தை அந்த பெண் கேட்க அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பெண்ணின் வங்கிக் கணக்கு எண்ணில் உள்ள முகவரிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. 

மேலும், தொலைபேசி எண்ணை வைத்து, அந்த பெண்ணின் இருப்பிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அது சினிமாவில் வருவதுபோல் ஒவ்வொருமுறையும் வெவ்வேறு ஊரையும், மாநிலத்தையும் காண்பித்துள்ளது. இதனால், போலீசார் தனிப்படை அமைத்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.