கள்ளக் காதல் மோகத்தால், கள்ளக் காதலன் உடன் சேர்ந்து மனைவியே கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து உள்ள செஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான ஆனந்தன், லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். 

இதனிடையே, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தனுக்கும், அங்குள்ள முத்தாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு, இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் பிறந்தன. 

திருமணத்திற்குப் பிறகு, கணவன் ஆனந்தன் மதுவுக்கு அடிமையானதால், வீட்டிற்கு வரும் போதெல்லாம் குடித்து விட்டு வருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்து உள்ளார்.

அதே நேரத்தில், திருமணத்திற்கு முன்பாகவே ஆனந்தனின் மனைவி சத்யாவிற்கும், அவரது தாய் மாமனான சீனிவாசனுக்கும் இடையே தகாத உறவு இருந்து உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும், திருமணத்திற்குப் பிறகு கணவன் ஆனந்தன் லாரி ஓட்டுநர் என்பதால், அவர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று பல மாநிலங்களுக்கும் சென்று வரும் நிலையில், அவர் மாத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே வீட்டில் தங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்து உள்ளார். இதனால், கணவன் வேலைக்குச் சென்ற பிறகு, திருமணத்திற்கு முன்பு தாய் மாமன் சீனிவாசன் உடன் இருந்த தகாத உறவை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து உள்ளனர். இதனால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த தகவல் அரசல் புரசலாக, அந்த பகுதி மக்கள் சிலருக்குத் தெரிந்தது.

ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், கணவன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து உள்ளார். இதனால், கள்ளக் காதலர்கள்  இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவிக்க முடியாமல், கடுமையாக தவித்து வந்து உள்ளனர்.

அப்போது, கணவன் உயிரோடு இருந்தால் தானே நமக்குத் தொல்லை என்று, அவரை கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி, கடந்த 13 ஆம் தேதி இரவு மனைவியின் கள்ளக் காதலன் சீனிவாசன், ஆனந்தனை மது குடிக்க அழைத்து உள்ளார். இந்த தகவலை, ஆனந்தன் தன் சக நண்பர்களிடம் எதார்த்தமாகக் கூறி உள்ளார். அதன் பிறகு, மது குடிக்க வந்த ஆனந்தனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து உள்ளனர். அதைக் குடித்த ஆனந்தனின் உடலில் விஷம் பரவத் 

தொடங்கியதும், அந்த பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் அவரை போட்டு விட்டு, சீனிவாசன் அங்கிருந்து சென்று உள்ளார். ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் ஆனந்தன் வாயில் நுரை தள்ளிய நிலையில், மயக்கி விழுந்து உயிரிழந்தார். 

அப்போது, சீனிவாசன் தான் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஆனந்தனைக் கொலை செய்திருக்கலாம் என்று, சந்தேகப்பட்ட ஆனந்தனின் சகோதரர் காசிநாதன் காளி, திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சீனிவாசன் மற்றும் உயிரிழந்த ஆனந்தனின் மனைவி சத்யா ஆகிய இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்து உள்ளனர். இதில், உண்மை தெரிய வந்தது. கொலை செய்ததை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.