இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 1,290 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி,  50,20,360 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9,95,933 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 39,42,361 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை உயர்வின் மூலம், உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைவிட இந்தியாவில் 3 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 31,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பிரேசிலில் இது 32,719 ஆக இருந்தது. ஆனால் இந்தியாவில் இந்தியாவில் 90 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது பாதிப்பு. 

கடந்த 11 நாள்களில், புதிதாக 10 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இந்தியாவில். இதன்மூலம், இந்தியாவில் 50 லட்சம் என்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் உலகில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு பட்டியலில் 50 லட்சத்தை தாண்டியது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனா பாதிப்பு 4,382,263 ஆக உள்ளது.

புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையை போலவே, உலகளவில் அதிக இறப்புகளுக்கான பட்டியலிலும், இந்தியாதான் நேற்றைய தினம் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக பார்த்தால், உலக நாடுகளில் கொரோனா மரணங்களில் இந்தியா தற்போது 3-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் புதிதாக 1,290 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். 

இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 82,066. அதுவே, அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,99,947 ஆகவும் பிரேசிலில் கொரோனா மரணங்கள் 1,33,119 என்றுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 40,55,231 பேர் குணமடைந்துள்ளனர். 

இதற்கிடையே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 5 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 115 ஆக அதிகரித்து உள்ளது. அந்தவகையில் நேற்று மட்டும் 11,16,842 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 11 நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 1,275ஆக பதிவாகியுள்ளது. இது ஒரேநாளில் பதிவான புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, முதல் 10 லட்சம் கொரோனா பாதிப்பிற்கு 167 நாட்கள் ஆனது. இது உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வேகமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் கடுமையான ஊரடங்கு இந்தியாவில் அமலில் இருந்தது. ஆனால் அடுத்த 40 லட்சம் பாதிப்புகள் 61 நாட்களில் ஏற்பட்டுள்ளது. இது உலகின் அதிவேக பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் புதிதாக 90,789 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த பாதிப்பில் 27 சதவீதம் (13 லட்சம்) செப்டம்பர் மாதத்தில் பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் புதிய உச்சமாக பலி எண்ணிக்கை பதிவாகி இருப்பதற்கு முக்கிய காரணம் மகாராஷ்டிரா. இங்கு மட்டும் 515 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் முதல்முறையாக 500க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த பலி 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது வரை 30,409 பேர் பலியாகி இருக்கின்றனர். இது நாட்டின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில் 37 சதவீதம் ஆகும். இம்மாநிலத்தில் பலி விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் பலியாகியுள்ளனர். இது அம்மாநிலத்தில் ஒரேநாளில் பதிவான புதிய உச்சமாகும். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,604ஆக அதிகரித்துள்ளது. மாநில அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிகபட்சமாக லக்னோவில் 15 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அங்கு பலி 539ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கர்நாடகாவில் 97, பஞ்சாபில் 90, ஆந்திராவில் 69, தமிழ்நாட்டில் 68, மேற்குவங்கத்தில் 59 பேர் என அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஒடிசா மாநிலத்தின் கட்டாக், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த நகரங்களுக்கு பதிலாக வேறு இடங்களுக்கு கொரோனா நோயாளிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளிடம் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று 80,663ஆக குறைந்த புதிய பாதிப்புகள் நேற்று கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கு கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்புகள் பதிவானது ஒரு காரணமாகும். அதன்படி மேற்குவங்கத்தில் புதிதாக 3,227 பேரும், ராஜஸ்தானில் 1,760 பேரும் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கர்நாடகா மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் அங்கு 1,500 என பாதிப்புகள் குறைந்துள்ளன. கொரோனா பலி எண்ணிக்கை தினசரி சராசரி கடந்த ஜூலை முதல் வாரத்தில் 202ஆக மாநிலங்களில் இருந்தது. இதையடுத்து செப்டம்பர் 10ஆம் தேதி 495ஆக பதிவானது. இந்நிலையில் நேற்று 409ஆக காணப்பட்டது