மனைவியுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாசம் எடுத்த மிரட்டியவரை, கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சிவக்குமார் - மாதேஸ்வரி தம்பதியினர், கடந்த மாதம் சென்னையை அனகாபுத்தூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கி,  அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர்.

husband and wife kill a naughty Chennai blackmailer

அப்போது, சிவக்குமார் மனைவி மாதேஸ்வரிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

மேலும், இருவரும் உல்லாசம் அனுபவித்த காட்சிகளைக் கார்த்திகேயன், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டுள்ளார். 

பின்னர், சில நாட்களில் சிவக்குமார் - மாதேஸ்வரி தம்பதியினர், மீண்டும் ஆந்திராவிற்குச் சென்றுவிட்டனர். ஆனால், கார்த்திகேயன் தான் எடுத்து வைத்திருந்த ஆபாசப் படத்தை வைத்து, மாதேஸ்வரியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, “நான் குளிக்கும்போது, எனக்குத் தெரியாமல் என்னை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு, ஒருவர் தன்னை மிரட்டி வருகிறார்” என்று தனது கணவரிடம் மாதேஸ்வரி கூறியுள்ளார்.

husband and wife kill a naughty Chennai blackmailer

இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், மனைவி மூலமே, சிவக்குமாரை ஆந்திராவிற்கு வரச்சொல்லி உள்ளனர். அவரும் ஆந்திர மாநிலம் சித்தூர் வரவே, கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து, மண்வெட்டியால் கார்த்திகேயனை தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, தங்களது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர்.

பின்னர், கார்த்திகேயனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கார்த்திகேயன் பயன்படுத்திய செல்போன் சிக்னல் கடைசியாகக் காண்பித்த டவரை வைத்து, குற்றவாளிகளான சிவக்குமார் - மாதேஸ்வரியை கைது செய்தனர்.