“கடல்நீர் மட்டம் உயர்வதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக முடியும்” என்று, நாசாவின்  ஆய்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் பருவ நிலை மாற்றங்கள் முற்றிலும் வேறுபட்டும், மாறுபட்டும் நிற்கிறது. இதனால், உலக அளவில் பருவ நிலை மாற்றங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில், தற்போது காணப்படுகிறது.

உலகின் பல பகுதிகளிலும் புவி வெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு ஆகியவற்றின் தாக்கத்தை பல்வேறு பகுதிகளிலும் காண முடிகிறது. இதனால், நாளை உலகில் இந்த உலகம் எத்தகைய விபரீதங்களை சந்திக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகளும் சுட்டிக் காட்டி செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. 

இந்த நிலையில், ஐ.நா.வை சேர்ந்த IPCC is Intergovernmental Panel on Climate Change என்ற ஐபிசிசியின் முழு வடிவம் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு, இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது.

அதாவது, ஐ.நா சபையில் உறுப்பினர்களாக உள்ள 195 நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து IPCC எனப்படும், இந்த அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக வெளியான அந்த அறிக்கையில், “புவியின் வெப்ப நிலை உயர்ந்து கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்” என எச்சரிக்கப்பட்டு உள்ளது. 

இந்த ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, “உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களில் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் கடல் நீர் மட்டம் எவ்வளவு உயரும்?” என்பது குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதன் படி, “இந்தியாவில் சென்னை, மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் 2100 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிவிடும்” என கணிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, “தமிழகத்தில், சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள், கடலில் மூழ்கும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் இடம்” பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

முக்கியமாக, “வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்து விடும் என்றும், இது எதிர்பார்த்ததை விட அதிவேகமான செயல்பாடு” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது.

“இந்தியாவைப் பொறுத்த வரை, இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவது மிக வேகமாக நடைபெற்று வருகிறது” என்றும், அந்நிறுவனம் கூறியுள்ளது. 

இப்பியாக, “புவி வெப்பமடைதலால் பனிப்பாறைகள் உடைவது, அதனால் கடல் நீர் மட்டம் உயர்தல், வெப்ப அலைகள் தாக்கம் அதிகரிப்பு, பஞ்சம் மற்றும் வறட்சி உள்ளிட்டவை ஏற்பட உள்ளது” என்று, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, “நடப்பு நூற்றாண்டு 2100 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்தியாவின் 12 நகரங்கள் கடலில் மூழ்கிவிடும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது” உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பாதிப்பால், “இந்திய அளவில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும்” எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “இதற்கு, மனித நடவடிக்கைகள் சுற்றுச்சுழலில் ஏற்படுத்தியுள்ள மிக மோசமான பாதிப்பே இவற்றுக்கு மிக முக்கிய காரணம்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.