நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒன்பது எபிசோடுகள் அடங்கிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியானது.

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன்,ப்ரியதர்ஷன்,கார்த்திக் சுப்புராஜ்,கார்த்திக் நரேன்,ரதீந்திரன் R பிரசாத்,வசந்த் சாய்,அரவிந்த் சுவாமி,பிஜோய் நம்பியார்,சர்ஜூன் என ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் கிட்டார் கம்பி மேலே நின்று,சம்மர் ஆஃப் 92,பீஸ்,ப்ராஜட் அக்னி,இன்மை,பாயாசம்,ரௌத்திரம்,எதிரி,துணிந்தபின் என 9 எபிசோடுகள் வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான சூர்யா,விஜய் சேதுபதி,சித்தார்த்,அரவிந்த் சுவாமி, பிரசன்னா, அதர்வா,கிஷோர், பிரகாஷ்ராஜ்,ரேவதி,பாபி சிம்ஹா,அஞ்சலி,பார்வதி, யோகிபாபு, அதிதி பாலன், டெல்லிகணேஷ், கௌதம் வாசுதேவ் மேனன், பூர்ணா, ரித்விகா, ரோகினி,பிரயாகா மார்டின், ரம்யா நம்பீசன்,நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒன்பது எபிசோடுகளில் ஒருசில எபிசோடுகள் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ப்ராஜட் அக்னி, கிட்டார் கம்பி மேலே நின்று, ரௌத்திரம், பீஸ் உள்ளிட்ட எபிசோடுகள் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நவரசாவின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

நவரசாவில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை பிரயாகா மார்டின் இணைந்து நடித்துள்ள கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் இசையமைப்பாளர் கார்த்திக் இசையில் பாடலாசிரியர் கார்க்கி வரிகளில் வெளியாகியுள்ள அவள் பறந்து போனாளே பாடல் தற்போது வெளியானது. ரம்மியமான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.