தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இந்த டீஸர் வெளியாகி பல சாதனைகளை செய்து வருகிறது தற்போது 24 மணி நேரத்தில் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக உருவெடுத்துள்ளது.இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.