தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த பல மாதங்களாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் எட்டு மாதத்துக்கு பின், இன்று காந்தி ஜெயந்தியை ஒட்டி (அக்.,2) அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விதிமுறைகள்கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பொருள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அரசு சார்பாக, மாநிலம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டத்தை அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியாகியிட்டது.

இறுதி நேரத்தில் வந்த அறிவிப்பு, எதிர்க்கட்சிகளிடையே சந்தேகத்தை எழுப்பியது. குறிப்பாக கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, கொரோனாதான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமோ என எதிர்க்கட்சிகள் ஆரோயத் தொடங்கிவிட்டன. அதேநேரம், இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டங்கள் வழியாக, வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க. தலைமை கட்சியினருக்கு உத்தரவிட்டது. அதனால் பிரச்னை எழக்கூடும் என்பதாலேயே கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் வலிமையானவை ஆகும். ஒரு கிராமத்திற்கு எது தேவை. எது தேவையில்லை என்பதே அவர்களே முடிவு செய்து தீர்மானம் போட முடியும். அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் அந்த ஆண்டுகளில் திட்டங்களுக்கு செய்த செலவு கணக்கை மக்களுக்கு பொதுவெளியில் சொல்லியாக வேண்டும். அதேபோல் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அங்கே குரல் எழுப்பி அதற்கு மக்கள் பதிலும் பெற முடியும்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், "கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? கொரோனா கால செலவு கணக்கை ? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவந்துவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை நமதே" என்று கூறியுள்ளார்.

இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலினும் கண்டனம் தெரவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ``வேளாண் சட்டத்துக்கு எதிராக ஊராட்சி தலைவர்கள் அனைவரும் திரண்டஅச்சதால் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாகவும், அதிமுக அரசின் ஜனநாயக விரோத போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார். திட்டமிட்டபடி ஊராட்சி தலைவர்கள் மக்களை சந்திப்பார்கள்" என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கிடையே, இன்றைய தினம் கிராம சபை தடையை மீறி மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்தி வந்தார். இது, மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றார். குறிப்பாக அவர், கொரட்டூர், அகரவேல், நடுகுத்து வயல் உள்ளிட்ட கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அரசு தடையை மீறி கிராம சபை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சையை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. 

இந்நிலையில், கிராம சபைக் கூட்டம் நடத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்தபாபு மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 143, 188 ஆகிய பிரிவின் கீழ் வெள்ளவேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.