மத்திய அரசு தற்போது இந்திய திரைப்பட தணிக்கை துறை தொடர்பாக ஒளிப்பதிவு திருத்த சட்டத்தை அமலுக்குக் கொண்டு வருகிறது. ஒளிப்பதிவு சட்டம் 1952-ஐ திருத்தி மத்திய அரசுக்கு பல அதிகாரங்கள் கொடுக்கும் இந்த புதிய சட்டம் தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய ஒளிப்பதிவு சட்டத்தின் மூலம் தணிக்கை செய்து(Central Board of Film Certification (CBFC))  பெறப்பட்ட சென்சார் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்ய முடியும்.

மத்திய அரசின் தலையீட்டிற்கு வழிவகுக்கும் இந்த புதிய சட்டத்தில்  பொதுமக்களின் பார்வைக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருக்கும் பட்சத்தில் சென்சார் வாரியத்தின் தலைவரை அந்த சான்றிதழை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட சான்றிதழ்களில் விதிமீறல்கள் இருந்தால் அதனை மத்திய அரசு திருத்துவதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் விதமாக இருக்கிறது. அதாவது சென்சார் வாரியம் எடுக்கும் முடிவை மாற்றி அமைக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு தேவை என்பதை உணர்த்தும் விதமாக இச்சட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் அமலுக்கு வர இருக்கும் இந்த புதிய சட்டத்தை குறித்து ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து அனைவரும் குரல் எழுப்பும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்த பதிவில்,

சினிமா ஊடகங்கள் மற்றும் கல்வி இவை மூன்றும் இந்தியாவின் அந்த மூன்று குரங்குகள் சின்னம் போல் இருக்க முடியாது. வரப்போகும் தீயவைகளை பேசுவதும் பார்ப்பதும் மற்றும் கேட்பதும் தான் ஜனநாயகத்தை காயப்படுத்தும் பலவீனப்படுத்துவதற்கும் உள்ள முயற்சிகளுக்கு எதிரான ஒரே மருந்து. நம் சுய உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுங்கள் செயல்படுங்கள்

என தெரிவித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் இந்த முக்கியமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றதோடு வைரலாகி வருகிறது.