உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த மந்திரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன. இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன. இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இதனிடையே உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் ரஷியாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா போர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதனைத்தொடர்ந்து மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
உக்ரைன்: தமிழர்கள் நாடு திரும்ப விரும்பினால் உதவி எண்கள்: 044-28515288, 96000 23645, 99402 56444, அது போல் உக்ரைனில் உள்ள தற்போதைய நிலை குறித்தும் அந்நாட்டு அதிபருடன் இந்திய பிரதமர் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் முன்பாக, உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும். உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றமான நிலை கவலையை தருகிறது என ஐ.நா. பாதுகாப்பு சபை இந்திய பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.