மதுரையில் திருமண ஏற்பாட்டால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!

மதுரையில் திருமண ஏற்பாட்டால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! - Daily news

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பெண்ணின் விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயன்றதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம்  ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரது மகள் அகல்யா வயது 21 ஆகும். அகல்யா பி.ஏ படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அகல்யாவுக்கு, பெற்றோர் சிவங்கையை சேர்ந்த இளைஞருடன் திருமணம் பேசி நிச்சயம் செய்துள்ளனர். இவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. எனினும், அகல்யாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள், நிச்சயித்த இளைஞருடன் திட்டமிட்டபடி திருமணம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அகல்யா இதனால் மனமுடைந்து போய்  காணப்பட்டு வந்துள்ளார். மேலும் இந்த நிலையில், திருமணத்தையொட்டி, நேற்று பெண் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறு இருந்தது. இதற்காக குளிப்பதற்காக கழிவறைக்கு சென்ற அகல்யா, அங்கு துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அகல்யா வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கழிவறையின் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அகல்யா உயிரிந்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு உறவினர்கள் அகல்யாவை பார்த்து கதறி அழுதனர்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், அகல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொணடு வருகின்றனர். திருமணத்தில் விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment