முழுக்க முழுக்க ஆக்‌ஷன் இரத்த காட்சிகளுடன் காட்சிகளுடன் வித்யாசமான ரெட்ரோ லுக்கில் 'மாநகரம்' புகழ் சந்தீப் கிஷன் நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள மைக்கேல் முதல் பார்வையில் குணசித்தர வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வந்ததில் இருந்தே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டன.

விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் படங்களில் அவரது தோற்றத்திற்காகவும் அவரது தோரணைக்காவும் தனி எதிர்பார்ப்பு உருவாகி விடும் அந்த அளவு அவரது திரை பங்களிப்பு நேர்த்தியாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. 'பேட்ட', 'மாஸ்டர்' , 'விக்ரம்' போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் அவரும் அவரது நடிப்பும் வரவேற்கப்பட்டது. விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை 'விக்ரம் வேதா' வில் ரசித்தவர்கள் பெரும்பாலும் அவரிடம் நய்யண்டிதனம் கலந்த விள்ளத்தனத்தையே பெரிதும் எதிர்பார்கின்றனர். அதனாலே மைக்கேல் படத்திற்கும் அவருக்கென்ற ஒரு எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது. படத்தின் முதல் பார்வை மக்களை பெரிதும் கவர்ந்ததால் படத்தின் டீசர் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மேலும் ஆர்வத்தை கூட்டியது.

காதல் கலந்து அதிரடி படமாக உருவாகியுள்ள டீசரில் சில நிமிடங்களே விஜய் சேதுபதி வந்தாலும் வில்லத்தன பார்வையிலே திரையை தீப்பிடிக்க வைத்து விடுகிறார். மேலும் விஜய் சேதுபதி மட்டுமல்ல படத்தின் கதாநயாகனாக நடித்த சந்தீப் கிஷன் சிக்ஸ் பேக் கட்டுடலுடன் மாஸாக தோன்றி அசத்தியிருக்கிறார். ஸ்டைலான ஆக்ஷன் காட்சிகள் மூலம் சிறந்த அனுபவத்தை அவர் கொடுக்க போகிறார் என்ற நம்பிக்கையை கொடுக்கின்றது படத்தின் டீசர். மாநகரம் படத்திற்கு பிறகு தமிழில் இப்படி ஒரு படத்துடன் நீண்ட நாள் கழித்து வரவிருக்கிறார் சந்தீப் கிஷன். ஏற்கனவே சாம் சி எஸ் இசையில் பிரதீப் குமாரி குரலில் ‘நீ போதும் எனக்கு..' பாடல் மற்றும் அதன் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படம் வரும் பிப்ரவரி 3 ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என படக்குழு அறிவித்திருக்கின்றது.

இதில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி உடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகை திவ்யான்ஷா கௌஷிக், அனுசுயா பரத்வாஜ், மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.